மீண்டும் வேலையிடத்திற்கு வர அழைப்பு

மீண்டும் வேலையிடத்திற்கு வர அழைப்பு

1 mins read
833ac857-53e3-4e36-80b4-3591e22f20b2
-

சில நிறு­வ­னங்­கள் வாரந்­தோ­றும் பல நாள்­களில் தங்­க­ளின் ஊழி­யர்­களை வேலை­யி­டத்­திற்கு வரச் செய்­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. உதா­ர­ண­மாக, வாரந்­தோ­றும் இரண்டு முறை தனது ஊழி­யர்­கள் அலு­வ­ல­கத்­திற்கு வர­வேண்­டும் என்று 'ரேண்ட்ஸ்­டாட் சிங்­கப்­பூர்' வேலை வாய்ப்பு நிறு­வ­னம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறியது. ஊழி­யர்­கள் உள்ள குழுக்­கள், அவர்­க­ளின் வேலை ஆகி­ய­வற்­றைப் பொருத்து இதற்­கான ஏற்­பாடு செய்­யப்­படும்.

2020ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தி­லி­ருந்தே 227 ஊழி­யர்­களைக் கொண்ட 'ரேண்ட்ஸ்­டாட்' வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­கும் முறையை முழு­மை­யா­கச் செயல்­படுத்தி வந்­துள்­ளது.

'எல்­சர்' விளை­யாட்­டுத் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மும் வாரத்­திற்கு மூன்று முறை­யா­வது தனது ஊழி­யர்­களை அலு­வ­ல­கத்­திற்கு வர வைக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது. ஊழி­யர்­க­ளுக்­கி­டை­யே உ­றவை வலுப்­படுத்த இவ்­வாறு செய்­வ­தாக அது கூறி­யது.

எனி­னும், ஊழி­யர்­களை அவ­சரப்­பட்டு உட­னேயே வேலை­யிடத்­திற்கு வரச் சொல்­லக்­கூ­டாது என்று சில வர்த்­த­கத் தலை­வர்­களும் மனி­த­வள அதி­கா­ரி­களும் எச்­ச­ரிக்­கின்­ற­னர். ஈராண்­டு­க­ளாக வீட்­டில் வேலை செய்து பழக்­கப்­பட்ட ஊழி­யர்­கள் மாற்­றத்­திற்­குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள நேரம் வழங்கவேண்டும் என்பது அவர்களின் கருத்து.