சிங்கப்பூர் கொவிட்-19 கட்டுப்பாடுகளை இன்று முதல் மேலும் தளர்த்தியிருக்கும் நிலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு தூர இடைவெளித் தூதர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பொருளியல் தொடர்ந்து மீண்டு வரும் வேளையில் பாதுகாப்பு தூர இடைவெளித் தூதர்கள் இதர துறைகளில் வேலைக்குச் சேர வகைசெய்யும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நேற்று முன்தினம் கூறியது.
பல்வேறு அரசாங்க அமைப்புகள் தற்போது சுமார் 2,000 பாதுகாப்பு தூர இடைவெளித் தூதர்களை நியமித்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது. அவர்களில் தேவைப்படுவோருக்கு வேலை தேடிக்கொள்வது தொடர்பில் உதவி வழங்கப்படும்.

