சமூகத் திட்டத்தில் பங்கேற்கும் 75,000 பாலர் பள்ளி மாணவர்கள்

சமூகத் திட்டத்தில் பங்கேற்கும் 75,000 பாலர் பள்ளி மாணவர்கள்

1 mins read
19d305b2-0cae-4476-972c-22eff1f9fc8e
'பிரைட் கிட்ஸ் ஸ்கூல் ஹவுஸ்' பாலர் பள்ளியில் அமைச்சர் மசகோஸ் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுமார் 1,100 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 75,000க்கும் அதிகமான மாணவர்கள் இவ்வாண்டு சமூகத்திற்குத் தொண்டாற்றுவர்.

வசதி குறைந்­தோ­ருக்கு நன்­கொ­டை­யாக உணவு வழங்­கு­வது, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களுக்கு நன்றி தெரி­விக்­கும் அட்­டை­களை வழங்­கு­வது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களில் ஐந்து, ஆறு வயது சிறு­வர்­கள் ஈடு­ப­டு­வர். இதற்கு வழி­வ­குக்­கும் 'ஸ்டார்ட் ஸ்மோல் டிரீம் பிக்' எனும் 'இளம் வய­தில் தொடங்­குங்­கள், பெரிய கன­வு­க­ளைக் காணுங்­கள்' திட்­டத்தை பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு நேற்று தொடங்கி வைத்­தது. அதி­பர் சவால் இயக்­கத்­தின்­கீழ் இத்­திட்­டம் ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­பட்டு வரு­கிறது. எட்­டா­வது ஆண்­டாக இத்­திட்­டம் நடத்­தப்­படுகிறது.

இவ்வாண்டின் திட்டம் 'நமது குடும்பம், நமது சமூகம்' என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது.

பொங்கோல் வீவக புளோக் 173Dயில் உள்ள 'பிரைட் கிட்ஸ் ஸ்கூல் ஹவுஸ்' பாலர் பள்ளியில் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர்   அதில் கலந்துகொண்டார்.

'இளம் வய­தில் தொடங்­குங்­கள், பெரிய கன­வு­க­ளைக் காணுங்­கள்' திட்­டம் 2015ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது.