சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டு இல்லாத அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் உணவு, சேவைகள், தனியார் போக்குவரத்து ஆகியவற்றுக்கான விலை கூடியது. மூலாதாரப் பணவீக்கம் ஆண்டுக்காண்டு அடிப்
படையில் கடந்த மாதம் 2.9 விழுக்காடாக ஏற்றம் கண்டது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இது 2.2 விழுக்காடாக இருந்தது. மூலாதாரப் பணவீக்கத்தில் தங்குமிடம், தனியார் போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவு சேர்க்கப்
படாது.
புளூம்பர்க் ஆய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்த 2.5 விழுக்காடு
ஏற்றத்தைவிட மூலதாரப் பணவீக்கம் கூடுதலாக அதிகரித்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் மூலாதாரப் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டிறுதி வாக்கில் அது மட்டுப்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் தெரிவித்துள்ளன.
ஒட்டுமொத்த விலைவாசி கடந்த மாதத்தைவிட 5.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதற்கு முந்தைய மாதத்தில் அது 4.3 விழுக்காடு ஏற்றம் கண்டது. மாதத்துக்கு மாத அடிப்படையில் மூலதாரப் பணவீக்கம் கடந்த மாதம் 0.7 விழுக்காடு உயர்ந்தது.
ஒட்டுமொத்த விலைவாசி 1.2 விழுக்காடு அதிகரித்தது.
உலகளாவிய நிலையில் பொருள்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ள வேளையிலும் விநியோகச் சங்கிலி தடைப்பட்டுள்ள சூழலிலும் வெளிப்புற பணவீக்க அழுத்தங்கள் தீவிரமடைந்திருப்பதாக ஆணையமும் அமைச்சும் தெரிவித்தன.
அதே சமயம், சிங்கப்பூரில் தொழிலாளர் சந்தை தொடர்ந்து இறுக்கமாக இருந்து தொடரும் சம்பள உயர்வை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் தனியார் பணவீக்கம் 21.5 விழுக்காடு அதிகரித்தது. பிப்ரவரி மாதத்தில் அது 17.2 விழுக்காடு ஏற்றம் கண்டது.
கார், பெட்ரோல் விலை அதி
கரிப்பால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
உணவு விலை கடந்த மாதம் 3.3 விழுக்காடு உயர்ந்தது. பிப்ரவரி மாதத்தில் அது 2.3 விழுக்காடு ஏற்றம் கண்டது.
சமைக்கப்படாத உணவுப் பொருள்கள். உணவுச் சேவைகள் ஆகியவற்றின் விலை விரைவாக ஏற்றம் கண்டது.
சேவைகளுக்கான விலை பிப்ரவரி மாதத்தைவிட மார்ச் மாதத்தில் அதிகமாக இருந்தது. மார்ச் மாதத்தில் அது 2.6 விழுக்காடு அதிகரித்தது.
பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மின்சாரம் மற்றும் எரிவாயு விலை மார்ச் மாதத்தில் விரைவாக உயர்ந்து 17.8 விழுக்காடாகப் பதிவானது.

