பொருளியல் திட்டத்தின் வெற்றி நிறுவனம், ஊழியரணி உருமாற்றத்தைப் பொறுத்தது

பொருளியல் திட்டத்தின் வெற்றி நிறுவனம், ஊழியரணி உருமாற்றத்தைப் பொறுத்தது

2 mins read
821ecd26-a6cc-4dc5-b4da-0db33a00b364
-

உல­கப் பொரு­ளி­யல் ஏற்ற இறக்­க­மாக இருக்­கிறது. வேக­மாக மாறி வரு­கிறது. அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­பு­க­ளைத் தலை­சி­றந்த முறை­யில் பயன்­ப­டுத்­திக்­கொள்ள சிங்­கப்­பூர் பாடு­படும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்து இருக்­கி­றார்.

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் 2030 இலக்கு, தொழில்­துறை உரு­மாற்ற வழி­காட்­டித் திட்­டம் போன்ற பல்­வேறு திட்­டங்­களை அர­சாங்­கம் உரு­வாக்கி இருக்­கிறது என்­பதை அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அதோடு மட்­டு­மின்றி, தன்­னு­டைய வர்த்­த­கப் பங்­கா­ளி­களை இருதரப்பு, பலதரப்பு உடன்­பா­டு­கள் அடங்­கிய ஒரு கட்­ட­மைப்­பின் வழி­யாக ஈடு­ப­டுத்தி சவால்­களை அர­சாங்­கம் சமா­ளித்து வரு­வ­தா­க­வும் திரு கான் தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் இந்த உத்­தி­க­ளின், வர்த்­தக உடன்­பா­டு­க­ளின் வெற்றி என்­பது கிடைக்­கக்­கூ­டிய வாய்ப்பு­களை நிறு­வ­னங்­கள் எந்த அளவுக்கு விடாப்­பி­டி­யா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­றன என்­ப­தையே சார்ந்­தி­ருக்­கும் என்றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூர் பயணத்துறைக் கழ­கத்­துடன் சேர்ந்து நேற்று சன்­டெக் ஹைபிரிட் எக்ஸ்­பீ­ரி­யன்ஸ் சென்­ட­ரில் நடந்த வர்த்­தக, தொழில் அமைச்­சின் ஆய்­வ­ரங்­கில் அமைச்­சர் பேசி­னார். நிறு­வ­னங்­களும் தொழில்­து­றை­களும் அடித்தள அள­வில் உரு­மாற வேண்­டும். மக்­க­ளுக்கு நல்ல வாழ்க்­கைத் தொழில்­களை ஏற்­படுத்­தித் தரக்­கூ­டிய வலு­வான சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் உரு­வாக வேண்­டும் என்றார் திரு கான். செல­வு­கள் கூடு­கின்­றன. நிறு­வ­னங்­க­ளின் அன்­றாட செயல்­பா­டு­களுக்கு ஆத­ரவு அளிக்­கும் வகை­யில் சரி­யான தேர்ச்­சி­யு­டன் கூடிய ஊழி­யர்­கள் கிடைப்­பது சிர­ம­மாக இருக்­கிறது. இத்­த­கைய ஒரு நேரத்­தில் உரு­மாற்­றம் தேவை­தானா என்­றும் சில நிறு­வ­னங்­கள் கேள்வி எழுப்பி இருக்­கின்­றன என்­பதைத் திரு கான் சுட்­டி­னார்.

உண்­மை­யில் பார்க்­கப்­போ­னால், புத்­தாக்­கம், உரு­மாற்­றங்­களில் முழு­மூச்­சாக முன்­னேற்­றத்­தைச் சாதித்­தால்­தான் இத்­த­கைய சவால்­களை நிலை­யான முறை­யில் சமா­ளிக்க முடி­யும் என்று திரு கான் கூறினார்.

உலக நிலவரம் நிச்­ச­ய­மில்­லாமல் உள்ளது. பண­வீக்­கம் கொஞ்ச காலத்­திற்கு நீடிக்­கும். விநி­யோ­கக் கட்­ட­மைப்­பு இறுக்கமாகவே இருக்­கும். புவி சார்ந்த அர­சி­யல் நில­வ­ரங்­கள் ஏற்ற இறக்­க­மாக இருக்கும் என்­பதை அவர் ஒப்­பு­கொண்­டார்.

இருந்­தா­லும் உல­கப் பொரு­ளி­ய­லுக்கு மறு­வ­டி­வம் கொடுக்­கும் நீண்­ட­கால போக்­கு­க­ளை­யும் உரு­மாற்­றங்­க­ளை­யும் நிறு­வ­னங்­கள் கவ­னத்தில்கொண்டு செயல்­பட வேண்­டியது அவ­சி­யம் என்று திரு கான் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

சவால்­கள் அதி­க­ரித்து வரும் சூழ­லில் தொடர்ந்து நாம் பல்­வேறு வளர்ச்சி வாய்ப்­பு­களைக் கண்டு வரு­கி­றோம் என்ற அமைச்சர், அந்த வாய்ப்­பு­க­ளைப் பயன்­படுத்­திக்கொள்­ளக்­கூ­டிய நல்ல நிலை­யில் சிங்­கப்­பூர் உள்ளது என்­றார்.

மனி­த­வள அமைச்சு, பொரு­ளி­யல் வளர்ச்சிக் கழ­கம், எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு ஆகி­யவை 2030 இலக்­கை­யொட்­டிய தங்­கள் செயல்­திட்­டங்­க­ளை­யும் முயற்­சி­க­ளை­யும் அந்தக் கருத் தரங்கில் எடுத்­து­ரைத்­தன.