இயோ சூ காங் சாலையில் இன்று காலை இரண்டு கார்களும் ஒரு வேனும் மோதிக் கொண்டன. ஒரு காரின் ஓட்டுநரும் அவருடன் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
காலை சுமார் 8.20 மணியளவில் சம்பவம் குறித்து அழைப்பு கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமை தற்காப்பு படை தெரிவித்தது. அங் மோ கியோ அவன்யூ, இயோ சசூ காங் ரோடு சந்திப்பில் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
டிக்டாக் சமூகத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளியில் ஒரு கார் மோசமாகச் சேதமடைந்திருப்பது காணப்பட்டது. தெரு விளக்கு, சாலை சமிக்ஞை ஆகியவற்றின் சிதைவுகள் அருகில் உள்ள ஒரு புல்வெளியில் கிடக்கும் காட்சிகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. மற்றொரு காரின் சக்கரம் ஒன்று விழுந்துகிடப்பதையும் பார்க்கமுடிந்தது.
விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

