சிங்கப்பூர் ஏர்லைஸ் நிறுவனம் இலங்கையின் சுற்றுப்பயணத் துறையை மேம்படுத்துவதில் உதவ இருக்கிறது.
எஸ்ஐஏ நிறுவனமும் இலங்கை பயணத்துறை மேம்பாட்டுப் பிரிவும் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி வியாழக்கிழமை அது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
உடன்பாட்டின்கீழ், இரண்டு தரப்பும் கூட்டாக சேர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும்.
பற்பல நாடுகளுக்கு எஸ்ஐஏ வழங்கும் விமானச்சேவைகளைப் பயன்படுத்தி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுப்பயணிகளை ஈர்க்க முயற்சி செய்யப்படும்.
எஸ்ஐஏ கடந்த 1970ஆம் ஆண்டு கொழும்புக்கு விமானச் சேவைகளைத் தொடங்கியது.

