$200 மில்லியன் மீட்ட மோசடித் தடுப்பு நிலையம்

$200 மில்லியன் மீட்ட மோசடித் தடுப்பு நிலையம்

2 mins read
e44e4039-c810-42c2-ab24-05449fd6efe5
மோசடித் தடுப்பு நிலையத்தில் தீவிரமாகச் செயல்படும் அதிகாரிகள்.படம்: சிங்கப்பூர் காவல்துறை -

மோச­டிக்­கா­ரர்­க­ளி­டம் பறி­போக இருந்த ஏறத்­தாழ $200 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகையை மோச­டித் தடுப்பு நிலை­யம் மீட்­டுள்­ளது.

தற்­போது மோசடி குறித்து புகார் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பே

மோச­டிக்­கா­ரர்­க­ளைக் கண்­டு­பி­டிக்­கும் பணி­யில் காவல்­து­றை­யி­னர் தீவிர முயற்சி மேற்­கொள்­கின்­ற­னர்.

கடந்த மாதம் 27,300 வங்­கிக் கணக்­கு­களை முடக்கி $200

மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகையை மோசடித் தடுப்பு நிலை­யம் மீட்­ட­தாக காவல்­துறை பணித்­திட்­டக் கருத்­த­ரங்­கில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

நிதி மீட்பு தொடர்ந்து முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கும்­போ­தி­லும் மோசடிக் குற்­றங்­கள் நிகழ்­வ­தற்கு முன் அவற்­றைத் தடுப்­ப­தில் அதி­கா­ரி­கள் கவ­னம் செலுத்­து­வர் என்று அறி­விக்­கப்­பட்­டது.

காவல்­து­றை­யின் ஏழு நிலப் பிரி­வு­கள் ஒவ்­வொன்­றி­லும் மோசடி தடுப்­புக் குழு உள்­ளது.

அக்­கு­ழுக்­களில் இதற்­கென்றே தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அதி­கா­ரி­கள் இடம்­பெ­று­கின்­ற­னர்.

மோச­டிக் குற்­றங்­களை எதிர்­கொள்­வ­தில் அவர்­க­ளுக்கு அனு­

ப­வம் உள்­ளது.

மோசடித் தடுப்பு நிலை­யம் 2019ஆம் ஆண்­டில் வர்த்­தக விவ­கா­ரத் துறை­யின்­கீழ் உள்ள நிபு­ணத்­து­வப் பிரி­வாக அமைக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு மோசடித் தடுப்­புப் பிரிவு நிறு­வப்­பட்­டது. வர்த்­தக விவ­கா­ரத் துறை­யின்­கீழ் அனைத்து மோசடித் தடுப்­புப் பிரி­வு­களும் கொண்­டு­வ­ரப்­பட்­டன.

கடந்த மாதம் இப்­பி­ரிவு மோசடித் தடுப்பு தள­பத்­தி­ய­மாக விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டது.

தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு இந்­தத் தள­பத்­தி­யம் மோச­டி­களை முறி­ய­டிக்க ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களை நடத்­து­கிறது.

ஒரு­வர் மோச­டிக்­கா­ரர்­கள் விரித்த வலைக்­குள் விழு­வ­தற்கு முன்பே தள­பத்­தி­யத்­திற்கு எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பக்­கூ­டிய தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மோச­டிக் குற்­றங்­கள் தொடர்ந்து கவலை அளிப்­ப­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் தெரி­வித்­தார். கடந்த ஓர் ஆண்­டில் மோச­டிக் குற்­றங்­கள் 52 விழுக்­காடு அதி­க­ரித்­ததை அவர் சுட்­டி­னார்.

"புதிய குற்றப் போக்குகளை எதிர்கொள்ள காவல்துறை அதன் வளங்களை மறுசீரமைக்கிறது. அனைத்து வகை மோசடிகளுக்கான விசாரணையை மோசடித் தடுப்புத் தளபத்தியம் ஒரே பிரிவின்கீழ் கொண்டு வருகிறது.

"இதன் மூலம் மோசடிகளுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்கலாம்," என்றார் அவர்.