மஞ்சள் நிற 'டோர்ஸ்கோன்': என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது

மஞ்சள் நிற 'டோர்ஸ்கோன்': என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது

2 mins read
373b5b61-e36b-4dbe-a80b-9132ef3418db
'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் நேற்று உணவருந்திய பொதுமக்கள்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் நேற்று முதல் கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­களில் பெரும்­பா­லா­னவை தளர்த்­தப்­பட்­டன.

அத்­து­டன் 'டோர்ஸ்­கோன்' எச்­ச­ரிக்கை குறியீடு ஆரஞ்சு நிறுத்­தி­லி­ருந்து மஞ்­சள் நிறத்­துக்கு குறைக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய நடை­மு­றை­யின்­கீழ், ஒன்று ­கூ­டல்­களில் கலந்­து­கொள்­வோர் எண்­ணிக்­கை­யில் வரம்பு இல்லை.

பாது­காப்பு இடை­வெளி அணுகு ­முறை இனி கட்­டா­ய­மா­ன­தல்ல.

வேலை­யி­டங்­க­ளுக்கு அனைத்து ஊழி­யர்­களும் திரும்­ப­லாம்.

பெரும்­பா­லான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட முதல் நாளான நேற்று, மத்­திய வர்த்­தக வட்­டா­ரம் கிட்­டத்­தட்ட வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­யது.

அலு­வ­ல­கக் கட்­ட­டங்­கள், கடைத்­தொ­கு­தி­கள் ஆகி­ய­வற்­றுக்­குள் நுழைய வரி­சை­யில் காத்­தி­ருக்­கும் நிலை ஏற்­ப­ட­வில்லை.

இருப்­பி­னும், கடைத்­தொ­கு­தி­கள், திரை­ய­ரங்­கு­கள், உணவு மற்­றும் பானக் கடை­கள் போன்ற உட்­பு­றங்­களில் கட்­டா­யம் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும்.

உண­வ­ருந்­த­போது மட்­டுமே முகக்­க­வ­சத்தை அகற்­ற­லாம். உணவு சாப்­பிட்­ட­தும் உட­ன­டி­யாக முகக்­க­வ­சத்தை அணிந்­துக்­கொள்ள வேண்­டும்.

திரு­ம­ணம், கலை­நி­கழ்ச்சி போன்ற நிகழ்­வு­களில் 500 பேருக்­கும் அதி­க­மா­னோர் கலந்­து­கொண்­டால் தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான கட்­டுப்­பா­டு­க­ளின்­கீழ் நடை­மு­றைப்­

ப­டுத்­தப்­படும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டும். டோர்ஸ்­கோன் எச்­ச­ரிக்கை குறியீடு மஞ்­சள் நிறத்­துக்­குக் குறைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் உணவு, பானக் கடை­களில் 'சியர்ஸ்' செய்­து­கொள்­ள­லாம்.

உணவு, பானக் கடை­களில் பாது­காப்பு இடை­வெளி விதி­மு­றை­யைக் கடைப்­பி­டிக்­கத் தேவை­இல்லை.

இருப்­பி­னும், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் மட்­டுமே உணவு, பானக் கடை­களில் உண­வ­ருந்­த­லாம். இது­தொ­டர்­பாக, ஆங்­காங்கே சோத­னை­கள் நடத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நிகழ்ச்­சி­கள் நடை­பெ­றும் இடங்­களில் இனி பாது­காப்பு இடை­வெளி விதி­மு­றை­யைக் கடைப்­

பி­டிக்­கத் தேவை­யில்லை.

உள்­ள­ரங்­கு­கள், வெளிப்­பு­றங்­களில் நடை­பெ­றும் நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­வோர் எண்­ணிக்­கை­யில் வரம்பு இல்லை.

பார்­வை­யா­ளர்­களும் நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­க­லாம். அது­மட்­டு­மல்­லாது, நிகழ்ச்­சி­களில் உணவு, பான விற்­ப­னைக்கு அனு­மதி உண்டு. இது அந்­தந்த இடங்

­க­ளின் விதி­மு­றை­யைப் பொறுத்­தது. விளை­யாட்டு நிகழ்­வு­களில் உணவு, பானங்­க­ளுக்கு அனு­மதி உண்டு.

முன்­ப­திவு இல்­லா­மல் ஆக்­டிவ்­எஸ்­ஜிக்­குச் சொந்­த­மான நீச்­சல் குளத்­துக்­குச் சென்று நீந்­த­லாம். அதே­போல முன்­ப­திவு இன்றி ஆக்­டிவ்­எஸ்­ஜி­யின் உடற்­ப­யிற்­சிக் கூடத்­துக்­குச் சென்று உடற்­ப­யிற்சி­ யில் ஈடு­ப­ட­லாம். இருப்­பி­னும், ஆக்­டிவ்­எஸ்­ஜிக்­குச் சொந்­த­மான விளை­யாட்டு அரங்­கு­க­ளைப் பயன்­ப­டுத்த விரும்­பு­வோர் முன்­

ப­திவு செய்ய வேண்­டும்.

வழி­பாட்­டுத் தலங்­களில் பாது­காப்பு இடை­வெ­ளியை இனி கடைப்­பி­டிக்­கத் தேவை­யில்லை. அவ்­வி­டங்­களில் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தனித்­த­னி­யாக உண­வைப் பொட்­ட­லம் கட்­டத் தேவை­யில்லை. சமய வகுப்­பு­களில் முகக்­க­ச­வம் அணிந்­து­கொண்டு பாட­லாம்.

பெரும்­பா­லான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டா­லும் சில கட்­டுப்­பா­டு­கள் தொடர்­கின்­றன. புஃபே எனப்­படும் சொந்­த­மாக உண­வைப் பரி­மா­றிக்­கொள்­ளும் முறைக்கு இன்­னும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. திரு­ம­ணங்­கள், இறு­திச் சடங்­குகள் போன்ற நிகழ்­வு­களில் உண­வைப் பரி­மா­றும் ஊழி­யர்­

க­ளால் மட்­டுமே உணவு பரி­மா­றப்­பட வேண்­டும்.

இர­வு­வி­டு­தி­கள், கேளிக்­கை­வி­டு­தி­கள் போன்ற இடங்­களில் நட­னம் ஆட விரும்­பு­ப­வர்­கள் ஏஆர்டி கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொண்டு கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை நிரூ­பிக்க வேண்­டும். நட­னம் ஆடும்­போது முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும்.