குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் பற்றுறுதி

குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் பற்றுறுதி

1 mins read
faa4d5ce-f8e6-4989-be36-b5f678d52a6c
-

சிங்­கப்­பூ­ரின் குடும்­பப் பிணைப்பை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் எஸ்ஜி குடும்­பப் பற்­று­று­தியை திரு­ம­ணங்­கள் மற்­றும் குடும்ப உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான செயல் கூட்­டணி நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

"எனது குடும்­பப் பிணைப்பை வலுப்­ப­டுத்த நான் கடப்­பாடு கொள்­கி­றேன். ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் சொல்­வ­தைக் கேட்­பது.

"குடும்­பத்­தி­ன­ரு­டன் நேரம் செல­வ­ழிக்க நேரம் ஒதுக்­கு­வது, குடும்­பத்­தி­ன­ரி­டம் அன்பு, கனிவு, அக்­கறை காட்­டு­வது, குடும்­பத்­

தி­னரை மதித்து நடப்­பது (குறிப்­பாக எங்­க­ளுக்­குள் பிரச்­சினை எழுந்து அதற்­குத் தீர்வு காணும்­போது), கிடைத்த உற­வுக்கு நன்­றி ­யு­டன் இருப்­பது, மகிழ்ச்­சி­யான தரு­ணங்­க­ளி­லும் சவால்­மிக்க கால­கட்­டங்­க­ளி­லும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஆத­ர­வாக இருப்­பது ஆகி­ய­வற்­றின் மூலம் குடும்­பப் பிணைப்பை வலுப்

­ப­டுத்த உறுதி கொள்­கி­றேன்," என்­பதே அந்த பற்­று­றுதி.

குடும்ப உற­வு­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து அதில் கவ­னம் செலுத்­து­வ­தும் தங்­கள் குடும்­பப் பிணைப்பை எவ்­வாறு வலுப்­

ப­டுத்­து­வது என்­பது குறித்து தனி­

ந­பர்­களை யோசிக்க வைப்­ப­தும் இந்­தப் பற்­று­று­தி­யின் இலக்கு என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் தெரி­வித்­தார்.

இந்­தப் பற்­று­று­தியை வரும் ஜுன் மாதம் நடை­பெற இருக்­கும் தேசிய குடும்ப வாரம் போன்ற பொருத்­த­மான நிகழ்­வு­க­ளின்­போது

எடுத்­துக்­கொள்­ள­லாம் என்று

திரு­வாட்டி சுன் தெரி­வித்­தார்.