பொதுப் போக்குவரத்து மன்றத்தின் முதல் பெண் தலைவர்

பொதுப் போக்குவரத்து மன்றத்தின் முதல் பெண் தலைவர்

1 mins read
b5f588d7-8423-43fd-8086-f59916bd0942
-

பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றத்­தின் முதல் பெண் தலை­வ­ராக சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் தலை­வ­ரும் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜெனட் ஆங் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். மன்­றத்­தின் முன்­னாள் தலை­வர் கடந்த மாதம் மார­டைப்பு கார­ண­மாக மர­ண­ம­டைந்­தார்.

மன்­றத்­தின் புதிய தலை­வர் என்­கிற முறை­யில், கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்­குப் பிந்­திய கால­கட்­டத்­தில் நடத்­தப்­படும் பொதுப் போக்­கு­வ­ரத்­துக் கட்­டண மறு­ஆய்வை திரு­வாட்டி ஆங் மேற்­பார்­வை­யி­டு­வார்.

மன்­றத்­தில் தலை­வ­ராக திரு­வாட்டி ஆங்­கை­யும் மன்­றத்­தின் உறுப்­பி­னர்­க­ளாக 15 பேரை­யும் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் நேற்று நிய­மித்­தார். இவ்­வாண்டு மே மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து 2025ஆம் ஆண்டு ஏப்­ரல் 30ஆம் தேதி வரை மூன்று ஆண்­டு­க­ளுக்கு அவர்­கள்

அப்­ப­தவி­களை வகிப்­பர். பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தைத் தொடர்ந்து கட்டுப்படியான விலையில் வைத்திருக்க திருவாட்டி ஆங் செயல்படுவார் என்று போக்குவரத்து அமைச்சு கூறியது.