செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5c240a23-2f26-4d91-a8c8-fde38d65e2d9
-

சீனாவின் செல்வாக்கு ஈர்ப்பு குறியீடு: சிங்கப்பூருக்கு 2வது இடம்

உலக அளவில் சீனாவின் செல்வாக்கால் ஈர்க்கப்படும் இரண்டாவது நாடாக சிங்கப்பூரை பட்டியிலிட்டு உள்ளது தைவானைத் தளமாகக் கொண்ட ஓர் ஆய்வு நிறுவனம். 'டபுள்திங் லேப்' எனப்படும் அந்நிறுவனம் கம்போடியாவை முதலிடத்தில் தேர்ந்து எடுத்துள்ளது. விரிவடைந்து வரும் சீனாவின் செல்வாக்கு உலக நாடுகளில் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை அளவிட்டது இதன் ஆய்வு. சீனா குறியீடு ஒன்றையும் இந்நிறுவனம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தக் குறியீட்டில் பிலிப்பீன்ஸ் ஆறாம் இடத்திலும் மலேசியா எட்டாம் இடத்திலும் தைவான் ஒன்பதாம் இடத்திலும் அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்று உள்ளன.

தகாத வார்த்தைகளால் காவலரை திட்டிய பெண்ணுக்கு அபராதம்

ஆர்ச்­சர்ட் டவர்ஸ் கட்­ட­டத்­துக்கு வெளியே குடி­போ­தை­யில் இருந்­த­தால் கைது செய்­யப்­பட்ட ரஷ்ய மாது ஒரு­வர், தடுப்­புக்­கா­வ­லில் இருந்­த­போது காவல்­துறை அதி­கா­ரி­யைத் தகாத வார்த்­தை­க­ளால் திட்­டி­னார். கடந்த ஆண்டு மே 15ஆம் தேதி இரவு இக்­குற்­றச் சம்­ப­வம் நிகழ்ந்­தது. தொந்­த­ரவு விளை­வித்த குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்ட டாரியா செவோஸ்­தி­யா­னோ­வா­, 25, என்னும் அந்தப் பெண்ணுக்கு நேற்று நீதி­மன்­றம் $1,600 அப­ரா­தம் விதித்­தது. தண்­டனை விதிக்கப்பட்ட போது இவ­ரது மற்ற இரு குற்­றச்­சாட்­டு­களும் கருத்­தில்­கொள்­ளப்­பட்­டன.

'மனதளவில் பாதிக்கப்பட்ட மகன்களால் பெண் மரணம்'

கடந்த 2019ஆம் ஆண்டு 52 வயதுப் பெண் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில் நேற்று சில முக்கிய தகவல்கள் வெளியாயின. அந்தப் பெண்ணுக்கு கணவரைத் தவிர வேறு ஒருவருடன் தொடர்பிருந்ததாக அப்போது 21 வயதாக இருந்த அவரது மூத்த மகன் சந்தேகித்தார். 2019 ஆகஸ்ட் 16ஆம் தேதி அந்த ஆடவர் தமது தாயின் கைபேசியைத் தருமாறு கேட்டபோது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த இளைய மகனும் சேர்ந்து தள்ளி விட்டதில் அந்தப் பெண்ணின் தலை, சுவற்றில் இருமுறை மோதி பலத்த காயம் ஏற்பட்டது. கூ டெக் புவாட் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 2019 ஆகஸ்ட் 24ஆம் ேததி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய அண்ணன், தம்பியின் விவரங்களை நீதி மன்றம் நேற்று வெளியிடவில்லை. அப்போது 17 வயதாக இருந்த இளைய மகன் ஆட்டிசம் எனப்படும் மனஇறுக்கக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகாதீர் முகமது நேற்று தமது சாட்சியத் தில் தெரிவித்தார். மூத்த மகன் கடுமையான மன அழுத்தத் தால் பாதிக்கப்பட்டு இருந்ததும் பின்னர் சோதனை மூலம் கண்டறியப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.