உற்பத்தித் துறை 3.4% வளர்ச்சி

உற்பத்தித் துறை 3.4% வளர்ச்சி

1 mins read
75401293-4aa6-4030-b176-135e01411404
-

இவ்­வாண்­டின் பிப்­ர­வரி மாதம் வலு­வா­கக் காணப்­பட்ட சிங்­கப்­பூ­ரின் உற்­பத்­தித்­துறை வளர்ச்சி மார்ச் மாதம் மெது­வ­டைந்­த­தாக பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் தெரி­வித்து உள்­ளது. மருந்து தயா­ரிப்­புத் துறை­யில் வீழ்ச்சி காணப்­பட்­டது இதற்கு முக்­கிய கார­ணம் என்­றும் அது குறிப்­பிட்டு உள்­ளது.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 3.4 விழுக்­காடு பதி­வான உற்­பத்­தித் துறை­யின் வளர்ச்சி பிப்­ர­வரி மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் 17.5 விழுக்­காடு இறக்­கம் கண்­டது. இருப்­பி­னும், ஆண்டு அடிப்­ப­டை­யி­லான வளர்ச்சி 2% இருக்­கும் என்ற புளூம்­பெர்க் பகுப்­பாய்­வா­ளர்­கள் கணித்­த­தைக் காட்­டி­லும் சற்று அதி­கம் பதி­வாகி உள்­ளது.

உயிர்­ம­ருத்­துவ உற்­பத்­தித் துறையை விலக்­கி­விட்டு கணக்­கிட்­டால் ஆண்டு அடிப்­ப­டை­யி­லான வளர்ச்சி 9.7 விழுக்­காடு.

உற்­பத்­துத் துறை­யில் முக்­கிய பங்கு வகிக்­கும் மின்­னணுவி­ துறை 2021 மார்ச் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த மார்ச் மாதம் 14.5 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது.

மின்­னணுவி­யல் துறை­யின் எல்­லாப் பிரி­வு­க­ளி­லும் வளர்ச்சி பதி­வா­ன­போ­தி­லும் கணினி சாத­னங்­கள் மற்­றும் தரவு சேமிப்­புப் பிரிவு 4.3% சரி­வைச் சந்­தித்­தது.