ஓசிபிசி வங்கியில் கடன் வழங்கும் அதிகாரியாக குத்தகை முறையில் பணி யாற்றிய ஆடவர் ஒருவர், போலி ஆவணங்களின் அடிப்படையில் இருவர் கடன் பெற உதவினார். அவர் மூலம் ஆவணங்களைச் சமர்ப்பித்த மூன்றாவது வாடிக்கையாள ரின் $18,000 கடன் விண்ணப் பத்தை வங்கி நிராகரித்தது. போலி ஆவணங்கள் அடிப் படையில் கடன் வழங்க உத விய நிக்கலஸ் லாவ் வெய், 26, என்பவருக்கு நேற்று எட்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடன் வாங் கியவர்கள் திருப்பிச் செலுத் தாததால் வங்கிக்கு $36,000 இழப்பு ஏற்பட்டதாக தெரி விக்கப்பட்டது.
கடன் மோசடி: 8 மாதம் சிறை
1 mins read
-

