விபத்து: மருத்துவமனையில் இருவர்

விபத்து: மருத்துவமனையில் இருவர்

1 mins read
d58cd608-93d6-42f4-89e5-efa1a87e4e36
-

இயோ சூ காங் சந்­திப்பு ஒன்­றில் நேற்­றுக் காலை நிகழ்ந்த விபத்­தைத் தொடர்ந்து ஓர் ஆட­வ­ரும் ஒரு பெண்­ணும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

இரண்டு கார்­களும் ஒரு வேனும் சம்­பந்­தப்­பட்ட விபத்­தில் கார் ஓட்­டு­ந­ரான 52 வயது ஆட­வ­ரும் காரில் பய­ணம் செய்த 49 வய­துப் பெண்­ணும் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது சுய­நி­னை­வு­டன் இருந்­த­னர்.

அங் மோ கியோ அவென்யூ 5ம் இேயா சூ காங் ரோடும் சந்­திக்­கும் இடத்­தில் நிகழ்ந்த விபத்து குறித்து காலை 8.20 மணி­ய­ள­வில் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. விபத்து தொடர்­பான விசா­ரணை தொட­ரு­கிறது.

இந்த விபத்து தொடர்­பான காணொ­ளிப் படங்­கள் டிக்­டோக் சமூக ஊட­கத்­தில் அதி­கம் வலம் வந்­தன.