ஆடவர் ஒருவர் புத்தாண்டிற்கு முதல் நாள் கிளார்க் கீயில் ஒன்று கூடி இருந்தபோது மற்போர் முகக்கவசம் அணிந்து யூடியூப் காணொளியில் காட்சி அளித்தார்.
கிளாக்ஸி லோ ஸுவான் மிங், 19, என்னும் அந்த ஆடவருக்கு கொவிட்-19 விதிகளை மீறிய குற்றத்திற்காக நேற்று $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நண்பர்களுடன் இணைந்து காணொளி எடுத்தபோது அவர் விதிகளுக்கு முரணாக முகக்கவசம் அணிந்திருந்ததாகவும் குறைந்த பட்சம் 20 பேரிடம் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கத் தவறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

