தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஓய்வுபெற்ற ஆடவர் ஒருவர் கொவிட்-19 பரவலின்போது செந்தோசாவில் உள்ள மதுக்கூடத்தில் நுழைய வேறொரு நபரின் டிரேஸ்டுகெதர் செயலியைப் பயன்படுத்தினார்.
உதய்குமார் நல்லதம்பி, 65, ஆள்மாற்றம் செய்து ஏமாற்றிய குற்றச்சாட்டை புதன்கிழமை (ஏப்ரல் 27) அன்று ஒப்புக்கொண்டார்.
அவருக்கு ஐந்து நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த டிரேஸ்டுகெதர் செயலிக்குச் சொந்தக்காரராக மலேசிளர் கிரண் சிங் ரக்பீர் சிங், 37, உதய்குமாரை தம்போல நடிக்க சம்மதித்தார்.
அவருக்கு பிப்ரவரி மாதத்தில் ஐந்துநாள் சிறைத தண்டனை விதிக்கப்பட்டது.
கிரண் சிங்கும் அவரது காதலியும் 2021 செப்டம்பர் 9ஆம் தேதி ஹவ்காங்கில் உதய்குமாரை மதுகூடத்தில் சந்தித்தனர்.
மூவரும் செந்தோசா சென்று அங்கிருந்த கோஸ்டிஸ் மதுக்கூடத்துக்குச் சென்றனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்கத்தில் இருந்த பிக்கினி பார் எனும் மதுக்கூடத்தில் மூவரும் நுழைய முயன்றனர்.
ஆனால் உதய்குமார் அப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்பதால் பிக்கினி பார் மதுக்கூடத்தில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் கிரண் சிங் கொடுத்த யோசனையின்பேரில் அவரது டிரேஸ்டுகெதர் செயலியைப் பயன்படுத்தி கோஸ்டிஸ் மதுக்கூடத்தில் நுழைந்தார் உதய்குமார்.
அவருக்கு அனுமதி மறுத்த பக்கத்து மதுக்கூடத்தின் ஊழியர், கோஸ்டிஸ் மதுக்கூடத்தில் அமர்ந்து மது குடித்தத்தைப் பார்த்துவிட்டு அங்குள்ள ஊழியர்களுக்குத் தகவல் அளித்தார்.
தொலைபேசியைச் சோதித்ததும் உண்மை தெரிந்தது.

