$55 மி. வெள்ளிக்கு விற்கப்பட்ட 'வெர்டன் ஹவுஸ்'

$55 மி. வெள்ளிக்கு விற்கப்பட்ட 'வெர்டன் ஹவுஸ்'

1 mins read
abb86253-6359-4495-80bf-314e24fac025
'ஃபிரேகரன்ஸ்' குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியிடம் 'வெர்டன் ஹவுஸ்' விற்கப்பட்டது. கோப்புப் படம்: டெலாசா -

லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் முஸ்­தஃபா கடைத்­தொ­கு­திக்கு அருகே உள்ள 'வெர்­டன் ஹவுஸ்' கட்­ட­டம், 'ஃபிரேக­ரன்ஸ்' குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி ஜேம்ஸ் கோவிற்கு விற்­கப்­பட்­டுள்­ளது. இக்­கட்­ட­டத்தை வாங்க முன்­வந்­தோரில் அவரே ஆக அதி­க தொகையை வழங்­கத் தயா­ராய் இருந்­தார்.

இதன் மூலம் 'வெர்­டன் ஹவுஸ்' கட்­ட­டத்­தில் உள்ள வீட்டு உரி­மை­யா­ளர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் 2.1லிருந்து 2.8 வெள்­ளி­வரை வழங்­கப்­படும். இந்­தக் கட்­டத்­தில் உள்ள கடை உரி­மை­யா­ளர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் 5.7லிருந்து 7.5 மில்­லி­யன் வெள்­ளி­வ­ரை பெறு­வர்.

1980களில் கட்­டப்­பட்ட 'வெர்­டன் ஹவுஸ்' கட்­ட­டத்­தின் முதல் மாடி­யில் நான்கு கடை­களும் உண­வ­கங்­களும் உள்­ளன. மேல் மாடி­களில் 12 வீடு­கள் அமைந்துள்ளன.