சிறையில் வேலைத் திறன் பயிற்சி பெற்ற கைதிகள்

சிறையில் வேலைத் திறன் பயிற்சி பெற்ற கைதிகள்

1 mins read
15b3accd-e5f6-426c-9e2f-57be01612910
-

கட்­டு­மா­னத் துறை­யில் வேலை செய்து வந்த 30 வயது அமீ­ருக்கு (புனைப்­பெ­யர்), உரி­ம­மின்றி கடன் கொடுத்த குற்­றத்­திற்­காக மூவாண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அத­னால் அவர் வேலையை இழந்தார்.

சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட பிறகு தனக்கு வேலை கிடைக்­கா­மல் போய்­வி­டுமோ என்ற கவலை இருக்கும் அத்தகையோருக்கு உதவ திட்­டம் ஒன்று அறி­மு­கப்­படுத்­தப்­பட்­டது. அதன்கீழ் சிறைக் கைதி­களுக்­கா­க வழங்கப்படும் துல்­லி­யப் பொறி­யி­யல் பயிற்­சியை அமீர் உள்­ளிட்ட அனைத்து 17 கைதி­களும் வெற்­றி­க­ர­மாக முடித்­த­னர். சிங்­கப்­பூர் துல்­லி­யப் பொறி­யி­யல், தொழில்­நுட்­பச் சங்­கத்­தின் உறுப்­பி­னர்­கள் கைதிகளுக்குத் தகுந்த வேலை­ கொடுப்பர்.

'டிஏபி அண்ட் குரோ' எனும் 'பயிற்சி, வேலை வாய்ப்­பு­டன் வளர்ச்சி' எனும் பாடத் திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் துல்­லி­யப் பொறி­யி­யல் பயிற்­சியை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்ட சிறைக் கைதி­க­ளுக்­கான பட்­ட­ம­ளிப்பு நிகழ்ச்சி சாங்கி சிறைச்­சாலை நிலை­யத்­தில் நேற்று நடை­பெற்­றது. அந்­நி­கழ்ச்­சி­யில் உள்­துறை, தேசிய வளர்ச்சி ஆகி­ய­வற்­றுக்­கான துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

இத்­திட்­டம் 2020ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது. இதன் மூலம் 'வைஆர்­எஸ்ஜி' எனும் 'மஞ்­சள் நாடா சிங்­கப்­பூர்' இயக்­கம், பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வனங்­கள், பயிற்சி நிலை­யங்­கள், சமூ­கப் பங்­கா­ளி­கள் ஆகி­ய­வற்­றுடன் இணைந்து சிறை­யில் பயிற்சிக் கழ­கங்­களை அமைத்து வருகிறது.