லீ சியன் யாங்கின் வீட்டை 'லக்ஸ்ஏஷியா' குழுமம் வாங்குகிறது

லீ சியன் யாங்கின் வீட்டை 'லக்ஸ்ஏஷியா' குழுமம் வாங்குகிறது

1 mins read
28d1a8f5-d4c3-4206-ab11-61249a739b15
கேல்டிகாட் குளோஸ் பகுதியில் இருக்கும் திரு லீ சியன் யாங்கின் இரண்டு மாடி உயர்தர பங்களா. இதன் ஒரு சதுர அடியின் விலை 1,336 வெள்ளி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

திரு லீ சியன் யாங்­கும் அவ­ரின் மனைவி லீ சுவெட் ஃபெர்னும் கேல்­டி­காட் குளோஸ் பகு­தி­யில் இருக்­கும் தங்­க­ளின் 'குட் கிளாஸ் பங்­களா' எனும் உயர்­தர பங்­களாவை 'லக்ஸ்­ஏ­ஷியா' குழு­மத்­திற்கு விற்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­ற­னர். இந்த பங்­க­ளா­வின் விலை 13.25 மில்­லியன் வெள்ளி.

பங்­க­ளா­வின் ஒரு சதுர அடி­யின் விலை 1,336 வெள்ளி. இது, மீடி­யா­கார்ப் நிறு­வ­னம் அமைந்­திருந்த பகு­தி­யில் அமைந்­துள்­ளது.

இந்த பங்­க­ளா­விற்கு இம்­மா­தம் எட்­டாம் தேதி­யன்று 'லக்ஸ்­ஏஷியா'வின் நிர்­வாக இயக்­கு­நர் 'கேவீட்' எனப்­படும் சட்­ட­பூர்வ முன் னெச்­ச­ரிக்­கைக்கு விண்­ணப்­பம் செய்­தி­ருந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்ட ஆவ­ணங்­கள் குறிப்­பிட்­டன. சொத்தை வாங்­கு­வ­தற்கு முன்பு வாங்­கு­ப­வர் அதற்­கான முன்­ப­ணத்­தைச் செலுத்­திய பிறகு தனக்கு முன்­னு­ரிமை இருப்­பதை உறு­தி­செய்­து­கொள்ள சட்­ட­பூர்வ முன்­னெச்­ச­ரிக்­கைக்கு விண்­ணப்­பம் செய்­யப்­படும்.

சிங்­டெல் நிறு­வ­னத்­தின் முன்­னாள் தலைமை நிர்­வாக அதி­காரி­யும் 'ஃபிரேசர் அண்ட் நீவ்' நிறு­வனத்­தின் முன்­னாள் தலை­வ­ரு­மான திரு லீ, மூத்த வழக்­கறிஞரான அவ­ரின் மனைவி திரு­மதி லீ ஆகி­யோர் இந்த பங்­களாவின் கூட்டு உரி­மை­யா­ளர்­கள்.

சொகுசு பங்­க­ளா­வைப்­போல் வடி­வம் கொண்­ட­தா­கச் சொல்­லப்­படும் இதில் ஆறு படுக்கை அறை­களும் 'லிவிங் ரூம்' எனும் இரு வரவேற்பறைகளும் ஒரு சாப்பாட்டு அறையும் உள்ளன.