மாற்றங்களை பின்பற்ற ஊழியர்களுக்கு உதவி

மாற்றங்களை பின்பற்ற ஊழியர்களுக்கு உதவி

2 mins read
64932061-cdc7-48bf-81ba-bb19f903b9de
சிங்கப்பூரில் முதலாளிகளும் ஊழியர்களும் ஒற்றுமையுடன் சிரமமான ஈராண்டைக் கடந்து வந்திருப்பதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கொள்­ளை­நோய் உச்­சத்­தில் இருந்த வேளை­யில் பல்­வேறு நாடு­களில் வேலை­நி­றுத்­தங்­களும் அது­தொ­டர்­பான போராட்­டங்­களும் நிகழ்ந்­த­போ­தும் சிங்­கப்­பூ­ரில் உள்ள முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் ஒற்­று­மை­யு­டன் ஈராண்­டு­ க­ளைக் கடந்து வந்­தி­ருப்­ப­தாக மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­துள்­ளார்.

இதற்கு முக்­கிய கார­ணம் முத­லா­ளி­கள், ஊழி­யர்­கள் மற்­றும் அர­சாங்­கம் ஆகிய முத்­த­ரப்­பி­ன­ரி­டையே காணப்­படும் வலு­வான பங்­கா­ளித்­து­வம் என்­றார் அவர்.

கொள்­ளை­நோ­ய் ஏற்­ப­டுத்­திச் சென்­றுள்ள மாற்­றங்­களை ஊழி­யர்­கள் கடைப்­பி­டிப்­ப­தில் பங்­கா­ளி­கள் உதவ இந்த முத்­த­ரப்பு முறை கைகொ­டுத்­தது என்று டாக்­டர் டான் தமது மே தினச் செய்­தி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"உல­க­ள­வில் நீக்­குப்­போக்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொள்­ளும் வகை­யில் முத­லா­ளி­கள் மற்­றும் ஊழி­யர்­க­ளின் விருப்­பங்­கள் மாற்­றம் கண்டு வரு­வதை நாம் காண்­கி­றோம்.

"இது­போன்ற புதிய வேலை முறைக்கு உரு­மாற்­றம் பெற நமது முத­லா­ளி­க­ளை­யும் ஊழி­யர்­க­ளை­யும் ஆத­ரிக்­கும் முயற்­சி­களை முத்­த­ரப்பு பங்­கா­ளி­கள் தொட­ரு­வார்­கள்.

"மனி­த­வள அமைச்சு தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) மற்­றும் சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் ஆகி­யன இவ்­வாண்டு இறு­திக்­குள் முத்­த­ரப்பு நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­கள் மீதான முத்­த­ரப்பு தர­நி­லை­யின் கீழ் குறைந்­த­பட்­சம் 10ல் நான்கு ஊழி­யர்­க­ளைக் கொண்டு வர கடப்­பாடு கொண்டு இருக்­கி­றா­ர­கள்.

"எந்­த­வோர் ஊழி­ய­ரும் பின்­தங்­கி­வி­டக் கூடாது என்­ப­தில் நாங்­கள் கவ­ன­மாக இருக்­கி­றோம்," என்­றார் அமைச்­சர்.

மேலும், படிப்­ப­டியாக உய­ரும் சம்­பள அணு­கு­முறை, வர்த்­த­கங்­களும் ஊழி­யர்­களும் நீடித்த வளர்ச்சி காண உத­வு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

வெவ்வேறு திறன்­க­ளைக் கொண்ட ஊழி­யர்­க­ளுக்­கான குைறைந்­த­பட்ச ஊதியத்­தை­யும் பயிற்­சித் தேவை­க­ளை­யும் அடைய படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை ஓர் ஏணி­யா­கப் பயன்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

முத்தரப்பு பங்காளித்துவத்தின் சிறப்பு குறித்து மனிதவள அமைச்சர்