நாகேந்திரன் உடல் மலேசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது

நாகேந்திரன் உடல் மலேசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது

1 mins read
9b746200-3af9-4fe2-8b07-bf646e067874
நாகேந்திரனின் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. படம்: தமிழ் முரசு -

போதைப்­பொ­ருள் கடத்­திய குற்­றத்­திற்­காக நேற்று காலை மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட நாகேந்­தி­ரன் கே தர்­ம­லிங்­கத்­தின் நல்­லு­டல் நான்கு மணி நேரம் இறுதி அஞ்­ச­லிக்­காக இங்கு வைக்­கப்­பட்டு பின்­னர் மலே­சி­யா­வின் ஈப்­போ­விற்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டது.

சின் மிங் டிரைவ் புளோக் 38ல் நேற்று பிற்­ப­கல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 33 வயது நாகேந்­தி­ர­னின் உட­லுக்கு நண்­பர்­கள், சமூக ஆர்­வ­லர்­கள், பொது­மக்­கள் என கிட்­டத்­தட்ட 100 பேருக்கு மேல் இறுதி அஞ்­சலி செலுத்­தி­னர்.

பல இனம், பல சம­யத்­தைச் சேர்ந்­த­வர்­களும் இதில் கலந்து கொண்­ட­னர். நாகேந்­தி­ர­னின் தாயா­ரும் அவ­ரது உற­வி­னர்­களும் அங்கு காணப்­பட­வில்லை.