மரண தண்டனை வழக்கு தொடர்பில் ஏஜிசி அறிக்கை

மரண தண்டனை வழக்கு தொடர்பில் ஏஜிசி அறிக்கை

1 mins read
4bb357ac-e0a0-4794-a29f-7200592e4c02
-

போதைப்­பொ­ருள் கடத்­த­லுக்­காக நாகேந்­தி­ரன் கே, தர்­ம­லிங்­கம், 33, என்­னும் மலே­சி­ய­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட வழக்­கில் தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேன­னின் ஈடு­பாடு குறித்து சிங்­கப்­பூ­ருக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் தனிப்­பட்­ட­வர்­களும் குழுக்­களும் அவ­ம­திக்­கும் வகை­யி­லான பொய் குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி வரு­வ­தாக சிங்­கப்­பூ­ரின் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் (ஏஜிசி) தெரி­வித்து உள்­ளது.

நாகேந்­தி­ர­னுக்கு நேற்று மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட பின்­னர் அந்த அலு­வ­ல­கம் ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது. அவ­

ம­திப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய எந்­த­வோர் செய­லை­யும் தான் கடு­மை­யா­கக் கரு­து­வ­தா­க­வும் நீதி நிர்­வா­கத்­தைக் காக்­கும் வகை­யில் தகுந்த நட­வ­டிக்கை எடுக்க தயங்­கப்­போ­வ­தில்லை என்­றும் அந்த அறிக்­கை­யில் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் எச்­ச­ரித்­துள்­ளது.

நாகேந்­தி­ர­னின் மரண தண்­ட­னை­யைத் தடுத்து நிறுத்த இறுதி நேரத்­தில் அவ­ரது தாயார் திரு­மதி பாஞ்­சாலை சுப்­பி­ர­ம­ணி­யம் கடந்த திங்­கள்­கி­ழமை தாக்­கல் செய்த மனு­வில் பொய்­யான குற்­றச்­சாட்­டு­கள் காணப்­பட்­ட­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

மேலும், இந்த மனு நீதி­மன்ற நடை­மு­றையை அவ­ம­திக்­கும் வகை­யி­லும் சட்­டப்­ப­டி­யான தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தில் நியா­ய­மற்ற வகை­யில் தாம­தத்தை ஏற்­

ப­டுத்­து­வ­தா­க­வும் இருந்­த­தாக அறிக்கை குறிப்பிட்டது.

"திரு­மதி பாஞ்­சா­லைக்கு மனு­வைத் தயா­ரித்­துக் கொடுத்­த­வர்­கள் தலைமை நீதி­பதி மேனன் தமது வழக்கை விசா­ரிப்­ப­தில் தமக்கு ஆட்­சே­பனை இல்லை என நாகேந்­தி­ரன் கூறி­யி­ருந்­ததை வேண்­டு­மென்றே அந்த அம்­மை­யா­ரி­டம் தெரி­விக்­க­வில்லை எனக் கரு­தத் தோன்­று­கிறது," என­வும் அறிக்­கை­யில் கூறப்பட்டுள்­ளது.