ஏமாற்றியோர் பெயர்களை வெளியிட நீதிபதி முடிவு

ஏமாற்றியோர் பெயர்களை வெளியிட நீதிபதி முடிவு

2 mins read
5476034b-d6e3-4a77-8cd9-e3b4023b70d6
-

கடந்த 2020ஆம் ஆண்டு சட்­டக்­கல்­வித் தேர்­வில் ஏமாற்­றிய ஆறு பயிற்சி வழக்­க­றி­ஞர்­க­ளின் பெயர்­களை வெளி­யிட உயர் நீதி­மன்ற நீதி­பதி சூ ஹான் டெக் முடி­வெ­டுத்­துள்­ளார். ஏமாற்­றி­ய­வர்­க­ளின் பெயர்­களை வெளி­யிட வேண்­டாம் என்று நீதி­பதி முத­லில் முடி­வெ­டுத்­தி­ருந்­தார். ஆனால் ஏமாற்­றி­ய­வர்­க­ளின் பெயர்­களை வெளி­யிட வேண்­டும் என்று தலை­மைச் சட்ட அதி­காரி விண்­ணப்­பம் செய்­ததை அடுத்து நீதி­பதி தமது முடிவை மாற்­றிக்­கொண்­டார்.

"தேர்­வில் ஏமாற்­றி­ய­வர்­க­ளின் பெயர்­களை வெளி­யி­டா­மல் இருந்­தால் அமை­தி­யான முறை­யில் அவர்­கள் திருந்­து­வ­தற்கு வாய்ப்பு கிடைக்­கும் என்று முத­லில் கரு­தி­னேன். ஆனால் தற்­போது அவர்­க­ளது பெயர்­களை வெளி­யி­டு­வ­து­தான் சரி­யான முடிவு என்று தீர்­மா­னித்­துள்­ளேன்.

மோனிஷா தேவ­ராஜ், குஷால் அட்­டுல் ஷா, ஸ்ரீராம் ரவீந்­தி­ரன், லின் குவேக் யி டிங், மேத்யூ சாய் ஜுன் ஃபெங், லய­னல் வோங் சூங் யூங் ஆகி­யோர் தேர்­வில் ஏமாற்­றிய பயிற்சி வழக்­க­றி­ஞர்­கள்.

வழக்­க­றி­ஞர்­க­ளா­கத் தங்­களை அங்­கீ­க­ரிக்க இந்த ஆறு பேரும் சமர்ப்­பித்­தி­ருந்த விண்­ணப்­பத்தை தலை­மைச் சட்ட அதி­காரி ஏற்க மறுத்­தார். இத­னால் அவர்­க­ளது விண்­ணப்­பங்­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த ஆறு பேரில் ஐவ­ரின் விண்­ணப்­பங்­கள் ஆறு மாதங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு­வ­ரின் விண்­ணப்­பம் ஓராண்­டுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆறு பேருக்­கும் இன்­னொரு வாய்ப்பு தர­வும் அவர்­க­ளுக்­குக் கெட்ட பெயர் ஏற்­பட்­டால் அவர்­க­ளது எதிர்­கா­லம் பாதிக்­கப்­

ப­டக்­கூ­டும் என்று கரு­தி­யும் அவர்­

க­ளது பெயர்­களை வெளி­யிட வேண்­டாம் என்று நீதி­பதி முத­லில் நினைத்­தார்.

ஆனால் இது சில­ரி­டையே அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யது. தேர்­வில் ஏமாற்­றிய பயிற்சி வழக்­க­றி­ஞர்­கள் எவ்­வித தண்­ட­னை­யும் இன்றி தப்­பித்­து­வி­டு­வர் என்று குரல்­கள் எழுந்­தன.

"உணர்ச்­சி­வ­சப்­பட்டு தலை­

யி­டும்­போது இரண்­டா­வது வாய்ப்பு தரு­வது குறித்த புரிந்­துணர்வை அது மழுங்­க­டித்­து­வி­டும். இரண்­டா­வது வாய்ப்பு தரு­வது குறித்து ஒவ்­வொ­ரு­வ­ரின் நிலைப்­பாடு மாறு­கிறது. சில­ருக்கு அதில் நம்­பிக்கை உண்டு. சில­ருக்கு இல்லை.

"இரண்­டா­வது வாய்ப்பு தேவைப்­ப­டு­ப­வர்­களும் உள்­ள­னர். அதைக் கொடுப்­ப­வர்­களும் உள்­ள­னர். ஆனால் இந்த இரு­த­ரப்­பி­ன­ருக்­கும் இடையே இருக்­கும் பிரி­வி­னர் யாருக்கு இரண்­டா­வது வாய்ப்பு கொடுக்­க­லாம் யாருக்­குத் தரக்­கூ­டாது என்ற நீண்ட விவா­தத்தை முன்­வைக்­கின்­ற­னர். இதற்கு முடிவே கிடை­யாது," என்று நீதி­பதி சூ நேற்று தெரி­வித்­தார்.