கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையில் இன்னொருவரின் டிரேஸ்டுகெதர் கருவியைப் பயன்படுத்தி மதுபானக்
கூடத்துக்குச் சென்ற 65 வயது உதயகுமார் நல்லதம்பிக்கு (படம்) ஐந்து நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆள்மாறாட்டக் குற்றச்சாட்டை ஓய்வுபெற்ற உதயகுமார் ஒப்புக்கொண்டார்.
மலேசியரான 37 வயது கிரன் சிங் ரக்பீர் சிங்கின் டிரேஸ்டுகெதர் கருவியைப் பயன்படுத்தி அவர் செந்தோசாவில் உள்ள மதுபானக்கூடம் ஒன்றுக்குள் நுழைந்தார்.
இந்தக் குற்றச்செயலை உதயகுமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதியன்று புரிந்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத
வராக இருந்ததால் மதுபானக்கூடத்துக்குள் அவரை ஏற்கெனவே அனுமதிக்காதது குறித்து
நினைவுகூர்ந்த மதுபானக்கூட உதவி மேலாளர் மேலதிகாரியிடம் கூற, உதயகுமாரின் குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.

