காப்பாற்ற விரைந்த தந்தை-மகன் கடலில் மூழ்கி மரணம்

காப்பாற்ற விரைந்த தந்தை-மகன் கடலில் மூழ்கி மரணம்

2 mins read
aa614826-a07a-4be6-ab28-2d409c68fbf4
-

கட­லில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்த சிங்­கப்­பூர் சுற்­றுப்­ப­ய­ணி­யைக் காப்­பாற்ற முயன்ற ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் இரு­வர் மாண்­ட­னர்.

2019ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் 21ஆம் தேதி காலை ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் உள்ள கிரேட் ஓஷன் ரோடுக்கு 30 வயது திரு சஞ்சய் பாஸ்­கர் சென்­றி­ருந்­தார்.

அவ­ரு­டன் அவ­ரது நண்­ப­ரும் சிங்­கப்­பூ­ர­ரு­மான திரு அபி­னாஷ் பாலச்­சந்­தி­ரன் பிள்­ளை­யும்

சென்­றி­ருந்­தார்.

உயிர்க்­காப்­பா­ளர்­கள் யாரும் இல்லை என்­றும் அந்­தக் கடற்­

ப­கு­தி­யில் நீந்­து­வது அபா­ய­க­ர­

மா­னது என்­றும் பல எச்­ச­ரிக்­கைப் பதாகைகள் இருந்­தும் திரு சஞ்சய் கட­லில் இறங்­கி­னார்.

சிறிது நேரத்­தில் அவ­ரைப்

பேர­லை­கள் கடற்­க­ரை­யி­ருந்து

கட­லுக்­குள் இழுத்­துச் ­சென்­ற­

தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

உதவி தேவைப்­ப­டு­வ­தாக திரு சஞ்சய் சைகை காட்­டி­யும் திரு அபி­னா­ஷுக்­குப் புரி­ய­வில்லை. தம்­மைப் புகைப்­ப­டம் எடுக்­கும்­படி திரு சஞ்சய் கூறு­வ­தாக அவர் நினைத்­தார். இந்­நி­லை­யில், திரு சஞ்சய் கடற்­க­ரை­யி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 100 மீட்­டர் தூரம் இழுத்­துச்

செல்­லப்­பட்­டார்.

நிலை­மை­யைப் புரிந்­து­கொண்ட திரு அபி­னாஷ், காலை மணி 10.35 மணி அள­வில் அவ­ச­ரக்­கால சேவை­க­ளு­டன் தொடர்­பு­கொண்டு உதவி நாடி­னார். திரு சஞ்­சய்யைக் காப்­பாற்ற விரைந்த மீட்­புப் பணி­யா­ளர்­களில் தந்தை-மக­னான 71 வயது திரு ராஸ் வில்­லி­யம்

பவ­லும் 32 வயது திரு ஆண்ட்ரூ ஃபிரான்­சிஸ் பவ­லும் இருந்­த­னர். இரு­வ­ரும் மீட்­புப் பணிக் குழு­வில் தொண்­டூ­ழி­யர்­க­ளா­கச் செயல்­

பட்­ட­னர்.

ஆனால் மீட்­புப் பணி­யின்­போது கட­லில் கொந்­த­ளிப்பு ஏற்­பட்ட கார­ணத்­தி­னால் அவர்­க­ளது விசைப்­

ப­டகு பழு­த­டைந்­தது. அப்­போது அந்த விசைப்­ப­ட­கில் அவர்­க­ளு­டன் இன்­னொ­ரு­வ­ரும் இருந்­தார்.

காலை 11.25 மணி அள­வில் படகு மீது பேரலை மோதி­ய­தில் அப்­ப­டகு கவிழ்ந்­தது. அதில் இருந்த மூவ­ரும் கட­லில் விழுந்­த­னர். திரு சஞ்­சய்யைக் காப்­பாற்ற விரைந்த திரு ராஸ் பவ­லும் அவ­ரது மகன் திரு ஆண்ட்ரூ பவ­லும் கட­லில் மூழ்கி மாண்­ட­னர். திரு சஞ்சய் மற்ற மீட்­புப் பணி­யா­ளர்­

க­ளால் காப்­பாற்­றப்­பட்­டார்.

தந்­தை­யும் மக­னும் பயன்­ப­டுத்­திய படகு நடு­க்க­ட­லில் பழு­த­டைந்­த­தா­க­வும் அது கவி­ழ்ந்­த­தால் இரு­வ­ரும் கட­லில் மூழ்கி மாண்­ட­தா­க­வும் ஆஸ்­தி­ரே­லிய மரண விசா­ரணை அதி­காரி தெரி­வித்­தார்.

சம்­ப­வம் நிகழ்ந்­த­போது திரு ஆண்ட்­ரூ­வின் வாழ்க்­கைத் துணை கர்ப்­ப­மாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. தமது பெண் குழந்­தை­யைப் பார்க்­கா­மல் திரு ஆண்ட்ரூ மாண்­டது, அவ­ரது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை மீளாத் துய­ரில் ஆழ்த்­தி­உள்­ளது.