பாதுகாப்பற்ற தரவுத்தளங்களை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் ஆறாவது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டுக்கான புள்ளிவிவரம்.
இந்தப் பாதுகாப்பற்ற தரவுத்
தளங்களிலிருந்து இணைய ஊடுருவல்காரர்கள் எளிதில் தகவல்
களைத் திருடிவிட முடியும் என்று கூறப்படுகிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது சிங்கப்பூரில் மின்னிலக்கமயமாகும் முறை விரிவடைந்தது.
அதே சமயம் பாதுகாப்பற்ற தரவுத்தளங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு படிப்படியாக அதிகரித்ததாக இணையப் பாதுகாப்பு நிறுவனமான குருப்-ஐபி நடத்திய ஆய்வு தெரிவித்தது.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது மின்னிலக்க அணுகு முறைக்கு மாறிய பல நிறுவனங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று ஆய்வு கூறுகிறது.
பட்டியலின் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.
அங்கு 93,700 பாதுகாப்பற்ற தரவுத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
54,800 பாதுகாப்பற்ற தரவுத்
தளங்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள ஜெர்மனியில் 11,200 பாதுகாப்பற்ற தரவுத்தளங்கள் உள்ளன.
சிங்கப்பூரில் 5,900 பாதுகாப்பற்ற தரவுத்தளங்கள் கண்டு
பிடிக்கப்பட்டன.

