தலையில் கம்பி விழுந்து வெளிநாட்டு ஊழியர் மரணம்

தலையில் கம்பி விழுந்து வெளிநாட்டு ஊழியர் மரணம்

1 mins read
77dad23d-6740-43d9-91b9-11ec44ddb9d4
எஃகு கம்பிகளை நகர்த்தும்போது ஒரு கம்பி ஊழியர் தலையில் விழுந்தது. (படம்: கூகிள் வரைப்படம்) -

வேலையிடத்தில் எஃகு கம்பி தலையில் விழுந்து பங்களாதே‌ஷ் ஊழியர் உயிரிழந்தார். எஃகு கம்பிகளை இடமாற்றம் செய்துகொண்டிருந்தபோது நேற்று அசம்பாவிதம் ‌ஏற்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

சம்பவத்தின் தொடர்பில் கவனகுறைவாக நடந்ததற்காக 49 ஆடவர் கைதுசெய்யபட்டார். மாண்டவருக்கும் கைதுசெய்யப்பட்டவருக்கும் என்ன தொடர்பு போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

உயிரிழந்த 42 வயதான ஊழியர் எஃகு கம்பிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக அவற்றை அடுக்கிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக மனிதவள அமைச்சு கூறியது.

சம்பவம் குறித்து காவல் துறைக்கு மாலை சுமார் 1.55 மணியளவில் அழைப்பு கிடைத்தது. ஊழியர் சம்பவ இடத்திலே மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர்.

எஃகு கம்பிகளை நகர்த்தும் பணியை உடனடியாக நிறுத்தும்படி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் மாண்டனர். இந்த மாதம் மொத்தம் ‌ஏழு பணியிட மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.