'மனிதவள நெருக்கடி ஒரு நீண்டகால சவால்'

'மனிதவள நெருக்கடி ஒரு நீண்டகால சவால்'

2 mins read
aa681c88-f391-41d3-bc93-b9d9b4f64231
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் ராபர்ட் யாப் நேற்று தமது மே தினச் செய்தியை வெளியிட்டார். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சிக்கு சவா­லாக விளங்­கக்­கூ­டும் என்று சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னத்­தின் தலை­வர் ராபர்ட் யாப் தமது மே தினச் செய்­தி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

ரஷ்­யா­விற்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யி­லான நெருக்­கடி குறு­கிய கால அடிப்­ப­டை­யில் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யலை பாதிக்­கும் என்­றா­லும் மனி­த­வள நெருக்­க­டி­யின் தாக்­கம் நீண்­ட­கா­ல சவால்­களை உரு­வாக்­கக்­கூ­டும் என்­றார் அவர்.

"மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க முத­லா­ளி­கள் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி வேலை­களை மாற்றி வடி­வ­மைக்­க­லாம்; ஊழி­யர்­கள் அதற்கு ஏற்ற திறன்­க­ளைப் பெற உத­வ­லாம்," என்று அவர் குறிப்­பிட்­டார். அத்­து­டன் சிங்­கப்­பூர் அதன் போட்­டித்­தன்­மை­யைத் தக்­க­வைத்­துக்­கொள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தொடர்ந்து கிடைப்­ப­தும் முக்­கி­யம் என்­றார் திரு யாப். திறன் இடை­வெ­ளி­யைக் குறைத்து, நாட்­டின் பொரு­ளி­யலை உல­க­ள­வில் ஆக உயர்ந்த போட்­டித்­தன்­மை­யு­டன் வைத்­தி­ருக்க இது உத­வும் என்­றார் அவர்.

"கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து மனி­த­வள நெருக்­கடி மேலும் மோச­ம­டை­ய­லாம் என்று அஞ்­சப்­ப­டு­கிறது. எனவே பொரு­ளி­யல் வளர்ச்­சி­யைத் தக்­க­வைக்­கும் பொருட்டு நிறுவனங்கள், தொழி­லா­ளர் சங்­கங்­க­ளு­ட­னும் அர­சாங்­கத்­து­ட­னும் இணைந்து மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை­யைச் சமா­ளிக்­கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள வேண்டும்," என்று திரு யாப் கூறி­னார்.

தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யு­டன் வேலை­களை மாற்றி வடி­வ­மைத்­தால் உற்­பத்தி அதி­க­ரிக்­கும் என்று கூறிய அவர், உற்­பத்­தித் தீர்­வு­கள் மானி­யத்­தைப் பயன்­ப­டுத்­தும்­படி நிறு­வ­னங்­களை ஊக்­கு­வித்­தார்.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­கத் தீர்­வு­களை ஏற்­றுக்­கொள்­வ­தற்­கான செல­வில் 80 விழுக்­காடு வரை இந்த மானி­யத்­தின் மூலம் பெற முடி­யும் என்­பதை அவர் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்மேளனம் அதன் முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­க­ளான தொழி­லா­ளர் சங்­கங்­கள், அர­சாங்­கம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து வேலை­யி­டங்­களை மேம்­ப­டுத்­த­வும் ஊழி­யர் நல­னுக்­கும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் என்றார் அவர்.