துவாலு பிரதமரின் முதல் அதிகாரபூர்வ வருகை

துவாலு பிரதமரின் முதல் அதிகாரபூர்வ வருகை

1 mins read
cc9e85b0-b201-4735-aed5-d1afcae51052
-

பசி­ஃபிக் தீவு நாடான துவா­லு­வின் பிர­த­மர் கௌசீ நடானோ முதல்­மு­றை­யாக அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்டு சிங்­கப்­பூர் வந்­துள்­ளார்.

இஸ்­தா­னா­வில் நேற்று அவர் சிங்­கப்­பூர்ப் பிர­த­மர் லீ சியன் லூங்­கைச் சந்­தித்­துப் பேசி­னார்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான நல்­லு­ற­வைத் தலை­வர்­கள் இரு­வ­ரும் மறு­உ­று­திப்­ப­டுத்­தி­னர்.

அதி­க­ரிக்­கும் கடல்­மட்­டத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் உல­கின் கவ­னத்தை ஈர்த்து வரும் மிகச் சிறிய நாடு துவாலு.

கடல்­மட்­டம் உயர்ந்­தால் அதன் சில பகு­தி­கள் மூழ்க நேரி­டும்; எஞ்­சி­யவை குடி­யி­ருக்க உகந்­த­வை­யாக இல்­லா­மல் போகக்­கூ­டும். ஆகவே கடல்­மட்ட உயர்­வைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­களை அது மேற்­கொள்­கிறது.

பிர­த­மர் நடா­னோ­வைச் சந்­திப்­ப­தில் தாம் மகிழ்ச்சி அடை­வதா­கத் திரு லீ ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டுள்­ளார். துவாலு உள்­ளிட்ட பசி­ஃபிக் தீவு நாடு­க­ளின் மேம்­பாட்­டுக்கு சிங்­கப்­பூர் ஆத­ரவு தரும் என்­றும் அவர் தம் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.