செம்ப்மரீன் பங்கு விலை சரிவு

செம்ப்மரீன் பங்கு விலை சரிவு

1 mins read
ea674fe7-a3f8-4fe6-aa39-5d66cb1020a2
-

செம்ப்­ம­ரீன் நிறு­வ­னத்­தின் பங்கு விலை நேற்று 19 விழுக்­கா­டு­வரை சரிந்­தது. அதே வேளை­யில், கெப்­பல் நிறு­வ­னத்­தின் பங்கு விலை 3.8 விழுக்­கா­டு­வரை அதி­க­ரித்­தது.

கெப்­பல் நிறு­வ­னத்­தின் கடல், கட­லோ­ரப் பிரி­வு­டன் செம்ப்­ம­ரீன் இணை­யப்­போ­வ­தாக நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­டது. அதைத் தொடர்ந்து செம்ப்­ம­ரீன் நிறு­வ­னத்­தின் பங்கு விலை சரி­வைச் சந்தித்தது.

செம்ப்மரீன், கெப்பலின் கடல், கடலோரப் பிரிவு ஆகிய இரண்டும் இணைந்த பிறகு உருவாகும் புதிய நிறுவனம், உலகின் ஆகப் பெரிய கடலோர எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும். இந்தப் புதிய நிறுவனத்தின் மதிப்பு 8.7 பில்லியன் வெள்ளி.

இந்த இரு நிறுவனங்களும் இணைவது கெப்பலுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.