வேலையிடத்தில் லாரி ஏறியதால் இந்திய ஊழியர் மரணம்

வேலையிடத்தில் லாரி ஏறியதால் இந்திய ஊழியர் மரணம்

1 mins read
ff2271b4-16f6-4561-9888-4bf6d1496bb1
நேற்று முன்தினம் மட்டும் நிகழ்ந்த இரண்டு வேலையிட மரணங்களில் இது ஒன்று. ஈசூன் தொழில்துறை வட்டாரத்தில் ஸ்திரீட் ஒன்றில் தான் நிறுத்தி வைத்த லாரி ஏறியதால் ஊழியர் மரணமடைந்தார். படம்: ஷின் மின் நாளிதழ் -

கன­ரக லாரி ஒன்று ஏறி­ய­தால் 39 வயது இந்­திய ஊழி­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். ஈசூன் தொழில்­துறை வட்­டாரம் ஸ்திரீட் ஒன்­றில் நேற்று முன்தினம் இந்த வேலை­யிட விபத்து நிகழ்ந்­தது.

மேடாக இருந்த பகு­தி­யில் அந்த ஊழி­யர் 'பிரைம் மூவர்' எனப்படும் கனரக லாரியை நிறுத்தி வைத்து அதி­லி­ருந்து வெளி­யேறியிருக்­கிறார். சிறிது நேரத்­திற்­குப் பிறகு அந்த லாரி நக­ரத் தொடங்­கி­ய­தா­க­வும் லாரியை நோக்கி ஓடிய ஊழி­யர் மீது அது ஏறி­ய­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் கேள்­வி­களுக்கு மனி­த­வள அமைச்சு பதி­லளித்­தது.

நேற்று முன்தினம் காலை எட்டு மணியளவில் இச்சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் நிகழ்ந்த மற்றொரு வேலையிட விபத்தில் பங்ளாதேஷைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் மாண்டார். அச்சம்பவம் பூன் லேயில் உள்ள நேத்தல் ரோட்டில் நிகழ்ந்தது.

'ஸ்டீல் பீம்' எனும் எஃகு கம்பியை மாற்றி வைக்கும்போது அது அவரின் தலையில் விழுந்ததால் அந்த ஊழியர் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. இதன் தொடர்பில் கவனமின்றி செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 49 வயது ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது.