புத்துயிர் பெற்றுள்ள உணவு, பானத் துறை

புத்துயிர் பெற்றுள்ள உணவு, பானத் துறை

1 mins read
e361a25b-b9a9-4c4a-9b14-3cc0c1a85e6c
'ஜூவெல் சாங்கி'யில் ஓர் உணவகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூர் வாசி­க­ளைச் சார்ந்­தி­ருக்­கும் துறை­கள் ஒரு­வ­ழி­யா­கப் புத்­து­யிர் பெற்றுள்­ள­தென சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. எனி­னும், உற்­பத்தி, தக­வல், தொடர்பு தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட துறை­கள் சுருங்­கின.

சென்ற ஆண்­டின் கடைசி காலாண்­டில் உள்­ளூர்வாசி­களை நம்­பி­யி­ருந்த நட­வ­டிக்­கை­கள் களை­யி­ழந்து காணப்­பட்­டன. கிரு­மிப் பர­வல் விதி­மு­றை­கள் அடிக்­கடி முடுக்­கி­வி­டப்­பட்­டது இதற்­குக் காரணம்.

எனி­னும், சென்ற ஆண்டு இறுதி­யி­லி­ருந்து கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்டு வந்­த­தைத் தொடர்ந்து உணவு, பானத் துறை­யில் விற்­பனை சூடு­பி­டித்­தது. இவ்­வாண்டு இத்­துறை தொடர்ந்து வளர்ச்சி கண்­டுள்­ளது.

உண­வ­கங்­கள், உணவு விநி­யோ­கச் சேவை­கள் ஆகிய இரு வகை வர்த்­த­கங்­க­ளுக்­கும் விற்­பனை சூடு­பி­டித்­தது.

இவ்வாண்டு முதல் காலாண்டில் போக்குவரத்துத் துறை வளர்ச்சி கண்டது. கூடுதலானோர் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தி வருவதால் இத்துறை வளர்ச்சி கண்டுள்ளது.

முதல் காலாண்­டில் வீட்­டி­லி­ருந்து வேலை பார்த்­தோ­ரில் பாதி பேர் வரை மீண்­டும் வேலை­யி­டத்­திற்­குத் திரும்பியது இதற்­குக் காரணம்.

கிருமிப் பரவல் சூழலில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த கட்டுமானத் துறையும் இவ்வாண்டின் முதல் காலாண்டில் மீண்டும் வளர்ச்சி கண்டது.