இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் தொழில்துறை இடங்களுக்கான வாடகை, விலை ஆகியவை தொடர்ந்து அதிகரித்துள்ளன. அதே வேளையில் பொதுவாக குறைவான தொழில்துறை இடங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக 'ஜேடிசி' வெளியிட்ட வர்த்தகச் சந்தை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தொழில்துறை இடங்களுக்கான விலை காலாண்டுக்குக் காலாண்டு அடிப்படையில் 2.1 விழுக்காடு அதிகரித்தது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் அது 5.6 விழுக்காடு கூடியது.
தொழில்துறை இடங்களுக்கான வாடகை காலாண்டு அடிப்படையில் ஒரு விழுக்காடு கூடியது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் அது 2.4 விழுக்காடு அதிகரித்தது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் 89.8 விழுக்காட்டு தொழில்துறை இடங்கள் பயன்படுத்தப்பட்டன. முன்னைய காலாண்டில் பதிவான விகிதத்தைவிட இது 0.4 விழுக்காடு குறைவு.

