சைக்கிளோட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் உணர்வைத் தரும் இந்த மாறுபட்ட படைப்பிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாய லேபாரில் உள்ள 'பார்க் யுவர்செல்ஃப்' எனும் இந்தப் படைப்பு, நகர மறுசீரமைப்பு ஆணையம், 'ரெடாஸ்' எனும் சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டுச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய 'யூஆர்ஏ-ரெடாஸ் ஸ்பார்க் சேலஞ்' போட்டியில் வெற்றிபெற்றது.
இப்படைப்பை உருவாக்கிய
31 வயது ஜோனத்தன் சின் (வலது), அவரின் மனைவி 28 வயது பெர்லின் சாங் ஆகியோருக்குப் பரிசுத் தொகையாக 10,000 வெள்ளி வழங்கப்பட்டது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

