வரி செலுத்தாத 4,500 சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல்: இருவர் கைது

வரி செலுத்தாத 4,500 சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல்: இருவர் கைது

1 mins read
4cf72426-2aa0-4535-bdd1-18c457bf0438
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச் சிகரெட் பொட்டலங்கள் (படங்கள்: சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை) -
multi-img1 of 3

சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் நடத்­திய சோத­னை­யில் வரி செலுத்­தப்­ப­டாத 4,500 சிக­ரெட்­டு­ பொட்டலங்கள் பறி­மு­தல் செய்­யப்­பட்டன. இதன் தொடர்பில் இரண்டு சிங்கப்பூரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

புதன்கிழமையன்று தோ பாயோ லோரோங் 8ல் அமைந்துள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் இரு ஆடவர்கள் ஒரு காருக்கும் ஒரு லாரிக்கும் இடையே பொட்டிகளை இடமாற்றுவதை அதிகாரிகள் கண்டனர். சோதனை நடத்தியதில் இரண்டு வாகனங்களில் 4,540 கள்ளச் சிகரெட் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு ஒரு பொட்டலத்தில் போதைப் பொருள் என நம்பப்படும் வெள்ளை தூளும் கண்டுபிடிக்கப்பட்டது. அது குறித்த மேல் விசாரணை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சிக­ரெட்­டு­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான 516,000 வெள்ளி வரி­யும் 39,00 வெள்ளி பொருள், சேவை வரி­யும் செலுத்­தப்­ப­ட­வில்லை.

வரி செலுத்­தப்­ப­டாத பொருள்­களை வாங்­கு­வது, விற்­பது, விநி­யோ­கிப்­பது, சேர்த்து வைப்­பது உள்­ளிட்­டவை சுங்­கத்­துறை சட்­டம், பொருள், சேவை வரிச் சட்­டம் ஆகி­ய­வற்­றின்­கீழ் மோச­மான குற்­றங்­க­ளா­கும்.

குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்கு சம்­பந்­தப்­பட்ட பொருள்­க­ளுக்குச் செலுத்­த­வேண்­டிய வரிக் கட்­ட­ணங்­களில் 40 மடங்கு தொகை அப­ரா­த­மாக விதிக்­கப்­ப­ட­லாம். மேலும், ஆறாண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம். இத்தகைய குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படக்கூடும்

சென்றாண்டு 463,232 கள்ளச் சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.