73 வயது ஆடவர் கொலை: பணிப்பெண் கைது

73 வயது ஆடவர் கொலை: பணிப்பெண் கைது

1 mins read
f65d0245-17e9-433c-ab63-6bffa4c8612d
-

73 வயது ஆடவர் கொல்லப்பட்டதன் தொடர்பில் 49 வயதான பணிப்பெண்ணை காவல் துறை கைது செய்துள்ளனர்.

நேற்று காலை சுமார் 8.50 மணியளவில் பீ‌ஷான் ஸ்டீரிட் 23ல் உள்ள ஒரு வீட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல் துறைக்கு அழைப்பு வந்தது. வீட்டில் ஆடவர் அசைவற்ற நிலையில் கிடந்ததாகவும் அவர் மாண்டுவிட்டதாகவும் மருத்துவ உதவியாளர்கள் உறுதிபடுத்தினர்.

இதன் தொடர்பில் மாண்டவர் வீட்டில் வேலைபார்க்கும் பணிப்பெண் கைதுசெய்யப்பட்டார். அவர் மீது நாளை குற்றச்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

விசாரணை தொடர்கிறது.