சிங்கப்பூரில் டெங்கி தொற்றுப் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவிறது. நான்கே மாதங்களில் 6,000 சம்பவங்கள் பதிவாகின.
இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு முழுவதும் பதிவான எண்ணிக்கையைவிட அதிகம். சென்றாண்டு 5,258 பாதிப்புகள் உறுதிசெய்யப்ப்டடதாகத் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
டெங்கி தொற்று பொதுவாக ஜூன் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் உச்சமடையும். இம்முறை அதற்கு முன்னதாகவே டெங்கி பாதிப்பு அதிகரித்திருபபதாக வாரியம் குறிப்பிட்டது.
ஏப்ரல் 26ஆம் தேதி நிலவரப்படி, டெங்கி அபாயமுடைய 193 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெங்கிக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்காற்றவேண்டும் என்று வாரியம் கேட்டுகொண்டது. கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடாமல் இருக்க வீடுகளை சுத்தமாக வைத்திருக்குமாறு அது குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டியது.


