லிம் சூ காங் பகுதியில் ராட்சத முதலை

லிம் சூ காங் பகுதியில் ராட்சத முதலை

1 mins read
bfea570a-464b-486a-ad1d-872bbd3f90bd
படங்கள்: குட் ஃபா யூ/பேஸ்புக் -

லிம் சூ காங் நீரிணையில் ஒரு ராட்சத முதலை தென்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடைப்பட்ட நீரிணை பகுதியில் முதலை காணப்பட்டது.

முதலை 3 மீட்டரிலிருந்து 4 மீட்டர் வரை நீளமானது என விலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள சுங்கை புலோ ஈரநில வனப்பகுதியில் முதலைகள் முன்பு தென்பட்டுள்ளன.

இங்குப் பெரும்பாலும் எஸ்டுவாரின் ரக முதலைகள் காணப்படுகின்றன.

பார்வையாளர்கள் யாரேனும் முதலைகளைக் கண்டால், அமைதியாக இருந்து அங்கிருந்து மெதுவாக அகல வேண்டும். முதலையை நெருங்கவோ, தொந்தரவு செய்யவோ, உணவு கொடுக்க முற்படவோ கூடாது.