மக்கள் ஆரோக்கியமாக இருக்க ஆராயப்படும் புதிய உத்திகள்

2 mins read
e8b83e46-c012-4fed-a297-a757591c7475
Credits: Singhealth -

வலு­வி­ழந்து இருக்­க­கூ­டிய ஒரு­வரின் உடலை அடை­யா­ளம் காணப் பயன்­ப­டுத்­தப்­படும் தானி­யக்­கக் கருவி. நாள்­பட்ட நோய்­களை மேலும் நன்­றா­கக் கண்­கா­ணிக்க உத­வும் செயலி.

மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­லும் அவ­சி­ய­மின்றி சிங்­கப்­பூ­ரர்­களை ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருக்க இத்­த­கைய புதிய உத்­தி­கள் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன அல்லது அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டுகின்றன.

மக்­கள்­தொ­கை­க்கான சுகா­தார ஆய்வை அடுத்­தக் கட்­டத்­திற்­குக் கொண்டுசெல்­லும் இத்­த­கைய முயற்­சி­க­ளுக்கு 90 மில்­லி­யன் வெள்ளி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஆரோக்­கி­ய­மான மக்­கள்­தொகையை அடைய அடித்­த­ளத்தை உரு­வாக்க இது உத­வும்.

சென்ற மாதம் சுகா­தார அமைச்சு 'ஹெல்­தி­யர் எஸ்ஜி' எனும் திட்டத்தை அறி­வித்­தது. பிற்­காலத்­தில் நோய்­வாய்ப்­ப­டா­மல் இருக்க முன்னரே ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை­மு­றை­யைக் கடைப்­பி­டிக்­கு­மாறு மக்­களை ஊக்­கு­விப்­பது அதன் நோக்­கம்.

அதைத் தொடர்ந்து புதிய சுகா­தார உத்­தி­கள் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன.

சமூக அள­வில் பரா­ம­ரிப்பை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் இத்­த­கைய புதிய தீர்­வு­களை ஆராய்ந்­து­வ­ரும் சிங்­ஹெல்த் குழு­மம், மக்கள்­தொகை சுகா­தார ஆய்வு நிலை­யத்­தைத் தொடங்­கி­யுள்­ளது.

முதன்­மு­றை­யாக நடை­பெற்ற 'சிங்­கப்­பூர் பாப்புலே­ஷன் ஹெல்த் சிம்­போ­சி­யம் 2022' எனும் சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை சுகா­தாரக் கருத்தரங்கில் அந்­நி­லை­யம் தொடங்கி வைக்கப்பட்டது.

'சிங்ெஹல்த் சென்டர் ஃபார் பாப்புலேஷன் ஹெல்த் ரிசர்ச் அண்ட் இம்பிளிமேன்டேஷன்' என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நிலையத்தை மெய்நிகராகத் திறந்துவைத்தார்.

ஆய்வு, புத்­தாக்­கம் மற்­றும் தொழில்­மு­னைப்பு 2025 திட்­டத்­தின்­கீழ் 90 மில்­லி­யன் வெள்ளி மதிப்புள்ள மானி­யத்தை சுகா­தார அமைச்சு தொடங்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"ஹெல்­தி­யர் எஸ்ஜி வழி­மு­றை­யின் ஓர் அங்­க­மாக இந்­தப் புதிய மானி­யத்­தின் மூலம் புத்­தாக்க அம்­சங்­க­ளைக் கொண்ட மக்­கள்­தொகை சுகா­தார ஆய்­வில் ஈடு­படும் ஆய்­வா­ளர்­களை நாங்­கள் சென்­ற­டை­ய எண்­ணம் கொண்டுள்­ளோம். சுகா­தாரம் சம்பந்தப்பட்ட விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது, நோய் வரா­மல் தடுப்­ப­தன் தொடர்­பி­லான சேவை­களை வழங்­கு­வது ஆகி­ய­வற்­றைப் பழக்­கப்­பட்ட முறை­களில் மேற்­கொள்­வ­தற்கு அப்­பால் எடுக்கப்படக்கூடிய முயற்­சி­களில் ஆய்­வு­கள் கவ­னம் செலுத்­தும்," என்று டாக்­டர் ஜனில் குறிப்­பிட்டார்.