ரத்தான டுவிட்டர் நிகழ்ச்சி

ரத்தான டுவிட்டர் நிகழ்ச்சி

1 mins read
eccab366-0477-4c4e-b639-2ac5e429699d
-

சமூக வலைத்­தள நிறு­வ­ன­மான டுவிட்­டர், சிங்­கப்­பூ­ரில் விரி­வு­படுத்தப்­பட்­டுள்ள அதன் அலு­வ­ல­கத்தின் அதி­கா­ர­பூர்­வ திறப்பு நிகழ்ச்­சியை ரத்து செய்­துள்­ளது. செல்­வந்­தர் எலன் மஸ்க் அந்­நி­று­வ­னத்தை வாங்­கப்­போ­வ­தாக அறி­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்­யப்­பட்­டது.

'கேப்­பிட்­டகி­ரீன் டவர்' கட்­ட­டத்­தில் அமைந்­துள்ள விரி­வு­ப­டுத்­தப்­பட்­ட டுவிட்­ட­ரின் அலு­வ­ல­கம் நேற்று முன்­தி­னம் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­ப­ட­வி­ருந்­தது. புதிய பகு­தி­யின் பரப்­ப­ளவு 22,000 சதுர அடி.

திறப்பு நிகழ்ச்­சி­யில் தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ கலந்­து­கொள்ளவிருந்­தார். சிங்­கப்­பூ­ரில் உள்ள டுவிட்­ட­ரின் அலு­வ­ல­கம், ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­துக்­கான அதன் மைய­மாக விளங்­கு­கிறது.