2021ஆம் ஆண்டின் ஆகச் சிறந்த விளையாட்டு வீரர் லோ கியென் யூ

2021ஆம் ஆண்டின் ஆகச் சிறந்த விளையாட்டு வீரர் லோ கியென் யூ

1 mins read
dbe6d674-06cf-4062-8aa5-f241dfe40885
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வழங்கும் விருதை வென்றுள்ளார் சிங்கப்பூர் பூப்பந்து வீரர் லோ (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் பூப்­பந்து வீரர் லோ கியென் யூ சென்ற ஆண்­டுக்­கான ஆகச் சிறந்த விளை­யாட்டு வீர­ராக விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்டுள்­ளார். 'எஸ்டி அத்லிட் ஆஃப் தி இயர்' எனப்­படும் அந்த விருதை 'எஸ்­பி­ஹெச் மீடி'வின் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் வழங்­கி­யது.

24 வயது லோ, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகப் பூப்பந்து விருதைக் கைப்பற்றி சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தார். வெற்றி வாகை சூடியபோதும் இவர் தொடர்ந்து அடக்கமாக இருந்துவருகிறார்.

"சிறப்­பாக விளை­யா­டக்­கூ­டிய இதர போட்­டி­யா­ளர்­கள் இருந்­த­போதும் நான் விருதை வென்­றதை எண்ணி மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன். எங்­கள் அனை­வ­ருக்­கும் பல்­வேறு சவால்­கள் இருந்­தி­ருக்­கின்­றன, நாம் பல தியாகங்­கங்­க­ளைச் செய்­துள்­ளோம். அத­னால் இந்த விருதை வெல்ல நாம் அனை­வ­ரும் தகு­தி­யா­ன­வர்­கள்­தான்," என்று லோ கூறி­னார்.

சென்ற ஆண்டு தொடக்­கத்­தில் சிறப்­பாக ஆடச் சிர­மப்­பட்ட லோவிற்கு கடந்த அக்­டோ­பர் மாதம் திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது. அப்போது நெதர்­லாந்து பொது­விருதை வென்­றார் லோ.