ஒன்றிணைந்து குரல் கொடுக்க அமைச்சர் விவியன் அழைப்பு

ஒன்றிணைந்து குரல் கொடுக்க அமைச்சர் விவியன் அழைப்பு

2 mins read
639c5036-d73f-458a-896e-4702b6b4facc
-

பிரச்­சி­னை­க­ளைக் கண்டு சிறிய நாடு­கள் எது­வும் செய்­யா­மல் மௌன­மாக இருந்­து­வி­டக்­கூ­டாது என்­றும் அவை ஒன்­றி­ணைந்து குரல் கொடுக்க வேண்­டும் என்­றும் நியூ­யார்க் நக­ரில் உள்ள ஐநா சபை­யில் வெளி­யு­றவு அமைச்­சர்

விவி­யன் பால­கி­ருஷ்­ணன் நேற்று முன்­தி­னம் அழைப்பு விடுத்­தார்.

உக்­ரேன் மீதான ரஷ்­யப் படை­யெ­டுப்பு இதை உணர்த்­தி­யி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

பல­த­ரப்பு முறை, அனைத்­து­ல­கச் சட்­டம் ஆகி­ய­வற்­றுக்கு சிறிய நாடு­கள் குரல் கொடுக்க வேண்­டும் என்­றார் அவர்.

பெரிய நாடாக இருந்­தா­லும் சிறிய நாடாக இருந்­தா­லும் அவற்­றின் இறை­யாண்மை சம­மான முறை­யில் மதிக்­கப்­பட வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

அப்­போ­து­தான் சிறிய நாடு­கள் நிலைத்­தி­ருக்க முடி­யும் என்று டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.

"தெளி­வான, கொள்­கைப் பிடிப்­புள்ள நிலைப்­பாடு மிக­வும் அவ­சி­யம்.

"பிற நாடுகளின் இறை­யாண்­மைக்கு மதிப்பு கொடுக்­கா­மல் அவற்றின் மீது படை­யெ­டுப்­பது இக்­கா­ல­கட்­டத்­தில் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்று.

"சிறிய நாடு­கள் கொள்­கை­யில் உறு­தி­யாக இருந்து அனைத்­து­ல­கச் சட்ட மீறல்­க­ளுக்கு எதி­ரா­கக் குரல் கொடுப்­பது முக்­கி­யம்," என்று அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.

ஐநா தொடர்­பான கூட்­டங்­களில் கலந்­து­கொள்­வ­தற்­காக நேற்று வரை அவர் நியூ­யார்க்­கில் இருந்­தார்.

சிறிய நாடு­க­ளுக்­கான கருத்­

த­ரங்­கில் உயர்நிலை வட்­ட­மா­நாட்­டில் கலந்­து­கொண்டு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் பேசி­னார். இந்த அதி­கா­ர­பூர்­வ­மற்ற குழுவை 1992ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூர் தொடங்­கி­வைத்­தது.

சிறிய நாடு­கள் ஒன்­றி­ணைந்து செயல்­ப­ட­வும் அவை எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­களை முன்­வைக்­க­வும் இந்­தக் குழு தொடங்­கப்­பட்­டது.

30 ஆண்டு நிறைவை இந்­தக் குழு இவ்­வாண்டு அனு­ச­ரிக்­கிறது.நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற கருத்­த­ரங்­கின் நெறி­யா­ள­ராக ஐநா­வுக்­கான சிங்­கப்­பூ­ரின் நிரந்­த­ரப் பிர­தி­நிதி புர்­ஹான் கஃபூர் செயல்­பட்­டார்.

"அனைத்­து­ல­கச் சட்­டக் கட்­ட­மைப்பு குறை­பா­டற்­றது அல்ல என்­பது நம் அனை­வ­ருக்­கும் தெரி­யும்.

"இருப்­பி­னும், ஐநா சாச­னத்­துக்­கும் அனைத்­து­ல­கச் சட்­டத்­துக்­கும் உட்­பட்டு நடப்­பது அமைதி, பாது­காப்பு, மனித உரி­மைப் பாது­காப்பு, பொரு­ளி­யல் மேம்­பாடு ஆகி­ய­வற்­றுக்கு மிக­வும் முக்­கி­யம். இதுவே உலக மக்­க­ளின் விருப்­பம்," என்­றார் அமைச்­சர்.

பல நாடு­கள் எதிர்­நோக்­கும் சவால்­களை எதிர்­கொள்ள ஐநா­வை­யும் பல­த­ரப்பு முறை­யை­யும் வலுப்­ப­டுத்­து­வது அவ­சி­யம் என்ற கருத்தை அவர் முன்­வைத்­தார்.

சிங்­கப்­பூ­ரின் இந்த நிலைப்­பாட்­டைக் கருத்­த­ரங்­கில் ஜமைக்­கா­வின் வெளி­யு­றவு அமைச்­சர் கமினா ஜான்­சன் ஸ்மித் வழி­மொ­ழிந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.