வழக்கில் வெற்றி பெறவில்லை என்றால் வழக்கறிஞருக்கான கட்டணத்தைச் செலுத்த தேவையில்லை என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து வரும் மே மாதம் 4ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களும் அவர்களது கட்சிக்காரர்களும் கலந்துரையாடி முடிவுக்கு வரலாம்.
இது குறிப்பிட்ட சில வழக்கு விசாரணைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு இத்தகைய அணுகுமுறைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தற்போதைக்கு அனைத்துலக, உள்ளூர் சமரச வழக்குகளுக்கும் சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தில் நடைபெறும் குறிப்பிட்ட சில வழக்குகளுக்கும் இவற்றுடன் தொடர்பான நீதிமன்ற,
சமரச வழக்குகளுக்கும் இந்தப்
புதிய அணுகுமுறையைப் பயன்
படுத்தலாம்.
இத்தகைய வழக்குகள் பெரும்பாலும் அதிக மதிப்புள்ள வர்த்தக உடன்பாடின்மையுடன் தொடர்
பானவை.
புதிய கட்டமைப்பு தொடர்பான வழிகாட்டிநெறிமுறை தயாரிக்கப்
படுவதாக வழக்கறிஞர் மன்றம் தெரிவித்தது.

