குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியவருக்குச் சிறை

குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியவருக்குச் சிறை

2 mins read
bdd58c68-599e-4dca-867b-b524338722a8
-

குடி­போதை­யில் குற்­றத்தை ஒப்­புக்­கொள்­ளச் சொல்லி போதைப்­

பொ­ருள் கடத்­திய சந்­தே­கத்­தின் பேரில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு­வரை அடித்­துத் துன்­பு­றுத்­திய மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­யான வெங்­க­டேஷ் ராஜ் நைநார் நாக­ரா­ஜ­னுக்கு (படம்) ஐந்து ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

2019ஆம் ஆண்டு முதல் வெங்­க­டேஷ் பணி இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

அவ­ரால் துன்­பு­றுத்­தப்­பட்ட மலே­சி­ய­ரான சிவ­பா­லன் கன்­னி­யப்­ப­னுக்கு $4,500 இழப்­பீடு தரு­மாறு 35 வயது வெங்­க­டே­ஷுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

துன்­பு­றத்­து­தல் வழக்­கில் வெங்­க­டேஷ் குற்­ற­வாளி என மாவட்ட நீதி­பதி சலினா இஷாக் கடந்த மாதம் தீர்ப்­ப­ளித்­தார்.

சம்­பம் நிகழ்ந்த நாளன்று வெங்­க­டேஷ் குடி­போ­தை­யில் பணி­யி­டத்­துக்­குச் சென்­ற­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

அது­மட்­டு­மல்­லாது, அன்று வேலை­யி­டத்­தி­லும் அவர் மது­

பா­னம் அருந்­தி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் அது தெரி­யா­மல் இருக்க பீர் டின்னை அவர் பைக்­குள் வைத்­தி­ருந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

குடி­போ­தை­யில் இருந்­த­போது கழி­வ­றை­யில் அவர் சிவ­பா­ல­னைத் தாக்­கி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, மற்­றொரு சம்­ப­வத்­தில் காவல்­துறை அதி­கா­ரியை வசை­பா­டி­யதை வெங்­க­டேஷ் ஒப்­புக்­கொண்­டார்.

இக்­குற்­றத்­துக்­காக அவ­ருக்கு $4,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

2020ஆம் ஆண்டு 14ஆம் தேதி­யன்று கேன்­பரா ஸ்தி­ரீட்­டில் உள்ள குடி­யி­ருப்­புக் கட்­ட­டத்­தின் தரைத்­

த­ளத்­தில் வெங்­க­டேஷ் தமது நண்­பர்­க­ளு­டன் மது­பா­னம் அருந்­திக்­கொண்­டி­ருந்­தார்.

இரவு 11.20 மணி அள­வில் இது­கு­றித்து புகார் செய்­யப்­பட்­டதை அடுத்து, காவல்­துறை அதி­காரி அவர்­களை அணு­கி­னார்.

அந்­நே­ரத்­தில் பொது இடத்­தில் மது­பா­னம் அருந்த அனு­மதி இல்லை என்று அதி­காரி தெரி­வித்­த­தும் வெங்­க­டேஷ் அவரை வசை­பா­டி­னார்.

இதை­ய­டுத்து, அவர் கைது செய்­யப்­பட்­டார்.