வேலையிட மரணங்கள் கூடியது தொடர்பில் நடவடிக்கை

வேலை­யிட மர­ணங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தைத் தொடர்ந்து 'சேஃப்டி டைம்-அவுட்' எனும் தேவைப்­ப­டும்­போது தற்­கா­லி­க­மாக வேலையை நிறுத்­தும் நடை­முறையை நடப்­புக்­குக் கொண்­டு­வ­ரு­வது குறித்து மனி­த­வள அமைச்சு வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார மன்­றத்­து­டன் இணைந்து செயல்­படு­கிறது.

சென்ற மாதம் எட்டுப் பேர் வேலை­யிட விபத்­து­களில் மர­ண­மடைந்­த­னர். கடந்த புதன்­கி­ழமை மட்­டும் மூவர் மாண்­ட­னர்.

பாதுகாப்பு வேலை நிறுத்த நடைமுறை வரையப்படும்போது விவரங்கள் வெளியிடப்படும் என்று மனிதவள அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தது.

சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதத்­திற்­குப் பிறகு சென்ற மாதம்­தான் ஆக அதி­க­மா­னோர் வேலை­யி­டங்­களில் மர­ண­ம­டைந்­த­னர். சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் 11 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வா­யின. 2016ஆம் ஆண்­டிற்­குப் பிறகு வேலை­யி­டங்­களில் ஒரு மாதத்­தில் அத்­தனை பேர் மாண்­டது அதுவே முதல்­முறை.

இவ்­வாண்டு இது­வரை 17 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வா­கி­விட்டன. சென்ற ஆண்டு முழு­வதும் 37 பேர் வேலை­யிட விபத்து­களில் உயி­ரி­ழந்­த­னர்.

2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 30ஆகப் பதிவானது. 2019ன் எண்ணிக்கை 39.

"அடிப்­படை அபா­யக் கட்­டுப்­பாடு­கள், வேலைப் பாது­காப்பு நட­வடிக்­கை­கள் ஆகி­யவை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தால் பெரும்­பா­லான விபத்­து­க­ளைத் தவிர்த்­தி­ருக்­க­லாம். அத­னால் இது கவலை தரும் ஒன்று," என்று மனி­த­வள அமைச்­சின் வேலைப் பாது­காப்பு, சுகா­தா­ர சோத­னைக் குழு­வின் இயக்­கு­நர் சபாஸ்டின் டான் கூறி­னார். வேலை­யி­டப் பாது­காப்­பிற்­கும் சுகா­தா­ரத்­திற்­கும் முன்­னு­ரிமை வழங்­கும் நோக்­கு­டன் தகுந்த நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு அவர் நிறு­வனங்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று புதிய வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார இயக்­கம் தொடங்­கப்­பட்­டது. இந்­தக் காலாண்­டில் 25 விழுக்­காடு கூடு­த­லான வேலை­யி­டச் சோத­னை­களை நடத்த கூடு­தல் வளங்­கள் ஒதுக்­கப்­பட்டு வரு­வ­தா­கத் தொடக்க நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது தெரிவித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!