'நேர்மையின்மை ஏற்றுக்கொள்ள முடியாதது'

'நேர்மையின்மை ஏற்றுக்கொள்ள முடியாதது'

2 mins read
96e7231c-e9e0-4aea-8d8a-396ff1fd6795
-

வழக்­க­றி­ஞர்­க­ளி­டம் நேர்­மை­யின்மை என்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது என்­றும் அவர்­கள் மிக உய­ரிய நடத்­தை­யைப் பின்­பற்­று­வது முக்­கி­யம் என்­றும் சட்ட, உள்துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் கூறி­யுள்ளார்.

வழக்­க­றி­ஞர் தேர்­வில் ஏமாற்­றிய மாண­வர்­களின் தொடர்­பில் வெளி­யான செய்­தி­க­ளைப் பற்­றிப் பேசிய திரு சண்­மு­கம், தங்­க­ளின் சேவை­களை நாடு­வோ­ரின் தேவை­க­ளுக்கு ஏற்­ற­வாறு வழக்­கறி­ஞர்­கள் நடந்­து­கொள்­ள­வேண்­டும் என்று குறிப்­பிட்­டார். அதற்கு நேர்மை முக்­கி­யம் என்­பதை அவர் சுட்­டி­னார்.

"வழக்­கறி­ஞர்­கள் பொதுவாக தங்­க­ளின் சேவை­களை நாடு­வோரின் நம்­பிக்­கைக்கு ஏற்­ற­வாறு நடந்­து­கொள்­ள­வேண்­டி­ய­வர்­கள்.

"நேர்மை, நற்­கு­ணம், மிக உய­ரிய நன்­ன­டத்தை. இவை மிக­வும் முக்­கி­ய­மா­னவை. நேர்­மை­யின்மை அறவே ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யா­தது." என்று திரு சண்­மு­கம் வலி­யுறுத்தினார்.

சாங்­கி­யில் நடை­பெற்ற 'தாரு­மாறு ரன்­னர்ஸ்' எனும் ஓட்­டப்­பந்­தயக் குழுவின் நிதி திரட்­டு நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்­ட­போது திரு சண்­மு­கம் செய்­தி­யா­ளர்­களிடம் பேசி­னார்.

2020ஆம் ஆண்டு வழக்­க­றி­ஞர் தேர்­வில் வழக்­க­றி­ஞ­ர்கள் ஆவதற்குப் பயின்று வந்த 11 பேர் ஏமாற்­றி­ய­தாக சென்ற மாதத் தொடக்­கத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­களில் ஆறு பேரை வழக்­கறி­ஞர் சங்­கத்­தில் சேர்த்­துக்­கொள்­வது ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. அவர்­களின் விண்­ணப்­பங்­களை அர­சாங்­கத் தலை­மைச் சட்ட அதி­காரி மறுத்­தார்.

சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் பிற்­கா­லத்­தில் பார­பட்­சத்­து­டன் நடத்­தப்­ப­டு­வதைத் தவிர்க்க அவர்­க­ளின் பெயர்­களை வெளி­யி­ட­வேண்­டாம் என்று உயர் நீதி­மன்ற நீதி­பதி சூ ஹான் டெக் முடி­வு­செய்­திருந்தார்.

ஆனால் சென்ற மாதம் 27ஆம் தேதி­யன்று அவர் தமது முடிவை மாற்­றிக்­கொண்­டார்.

அர­சாங்­கத் தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யின் விண்­ணப்­பத்­திற்­கேற்ப அவர் அந்த ஆறு பேரின் பெயர்­களை வெளி­யிட்­டார். சட்­டச் சங்­கத்­தின் ஆத­ர­வு­டன் தலை­மைச் சட்ட அதி­காரி விண்­ணப்­பம் செய்தார்.

இதன் தொடர்­பி­லான வழக்­கு­கள் இன்­னும் நீதி­மன்ற விசா­ரணைக்கு வரா­த­தால் தமது கருத்து­க­ளைக் கவ­ன­மாக வெளி­யி­டு­வ­தாக அமைச்­சர் சண்­மு­கம் சொன்­னார். நாடா­ளு­மன்­றத்­தில் கேள்­வி­கள் எழுப்­பப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.