நாடாளுமன்றச் சலுகைகள் குழு விசாரணையில் பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தம் சிங், ஃபைசல் மானப் ஆகியோரின் நடத்தை குறித்து விசாரிக்க காவல்துறையினர் சம்பந்தப்பட்டோரைத் தொடர்புகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றம் சமர்ப்பித்த ஆதாரத்தை காவல்துறை ஆய்வு செய்து முடித்துள்ளதாகக் கூறப்பட்டது.
பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் பொய் சொன்ன விவகாரத்தின் தொடர்பில் திரு ஃபைசல், எதிர்கட்சித் தலைவரான திரு சிங் ஆகியோர் மீது அரசாங்க வழக்கறிஞர் மேலும் விசாரணை மேற்கொள்வதற்குச் சாதகமாக நாடாளுமன்றம் வாக்களித்தது.
அதைத் தொடர்ந்து காவல்துறை இந்நடவடிக்கையை எடுக்கிறது.

