பிரதமர் பெயரைப் பயன்படுத்தும் பொய்ச் செய்தி

பிரதமர் பெயரைப் பயன்படுத்தும் பொய்ச் செய்தி

1 mins read
010432a9-1f4d-4c49-8a43-f3abad7b5274
மின்னிலக்க நாணயங்களில் முதலீடு செய்வதைப் பிரதமர் அங்கீகரிப்பதாகச் சொல்லும் செய்தி. படம்: சிங்கப்பூர் காவல்துறை -

மின்­னி­லக்க நாண­யங்­களில் முத­லீடு செய்­வதை பிர­த­மர் லீ சியன் லூங் அங்­கீ­க­ரித்­துள்­ளார் என்ற பொய்த் தக­வ­லைக் கொண்ட செய்திக் கட்­டு­ரை­க­ளின் தொடர்­பில் பொது­மக்­கள் விழிப்­பு­டன் இருக்­க­வேண்­டும் என்று காவல்­துறை­யி­னர் எச்­ச­ரித்­துள்­ள­னர். இத்­த­கைய கட்­டு­ரை­களில் குறிப்­பி­டப்­படும் முத­லீட்­டுத் திட்­டங்­கள் பாது­காப்­பா­னவை என்­றும் அவை அதி­கம் லாபம் தரக்­கூ­டி­யவை என்­றும் சொல்லப்படுவதாக காவல்­துறை வெளி­யிட்ட ஆலோ­சனை அறிக்கை தெரி­வித்­தது.

"இணையத்தில் வெளியிடப்படும் இத்தகைய கட்டுரைகள் பொதுவாக செய்திக் கட்டுரைகளின் வடிவில் உள்ள கட்டணம் கொண்ட விளம்பரங்கள்," என்று காவல்துறை சொன்னது.

ஒருவர் இந்­தக் கட்­டு­ரை­களில் இடம்­பெ­றும் இணை­ய­ மு­க­வ­ரிக்­குச் செல்­லும்­போது அவர் மின்­னி­லக்க நாணய முத­லீட்­டுத் திட்­டங்­கள் போன்­ற­வற்றை வழங்­கும் இணையத்­த­ளத்­திற்­குக் கொண்­டு­செல்­லப்­ப­டு­வார்.

அந்த இணையத்­தளத்­தில் தங்­க­ளின் தொடர்பு விவ­ரங்­க­ளைத் தெரி­விப்­போரை, சம்­பந்­தப்­பட்ட முத­லீட்­டுத் திட்­டங்­க­ளைக் கையாள்­ப­வர் என்று தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்­ளும் ஒரு­வர் தொடர்­பு­கொள்­வார்.

போலி­யான, தவ­றான கண்­ணோட்­டத்­தைத் தரும் இத்­த­கைய விளம்­ப­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளு­டன் தங்­க­ளைத் தொடர்புப்படுத்திக் கொள்­ள­வேண்­டாம் என்று காவல்­துறை பொது­மக்களைக் கேட்­டுக்­கொண்டுள்ளது. முத­லீடு தொடர்­பான முடி­வு­களை எடுக்­கும்­போது கவ­ன­மாக இருக்கு­மா­றும் அறி­வுரை வழங்கப்பட்டுள்ளது.பாது­காப்­பாக இருக்க மக்­கள் பல முயற்­சி­களை எடுக்­க­லாம் என்று காவல்­து­றை­யி­னர் குறிப்­பிட்­ட­னர்.

தங்­க­ளுக்கு வழங்­கப்­படும் முத­லீட்­டுத் திட்­டங்­க­ளைப் பற்­றிப் புரிந்து­கொள்ள சம்­பந்­தப்­பட்ட நிறு­வனங்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளி­டம் கேள்வி­க­ளைக் கேட்­பது அவற்­றில் ஒன்று.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் இணை­யத்­த­ளத்­தில் உள்ள நிதி நிறு­வ­னங்­க­ளுக்­கான தொகுப்­பில் சம்பந்தப்பட்ட நிறு­வ­னங்­க­ளின் நம்­ப­கத்­தன்மை குறித்து ஆரா­ய­வும் செய்­ய­லாம்.