தினந்தோறும் எல்லையைக் கடக்க விரும்பும் ஜோகூர் ஊழியர்கள்

தினந்தோறும் எல்லையைக் கடக்க விரும்பும் ஜோகூர் ஊழியர்கள்

1 mins read
966cea65-2205-4eb2-baaa-1232240815b1
-

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும்­போது வீட்­டி­லி­ருந்து இங்­குள்ள வேலை­யி­டங்­களுக்­குச் செல்­வதற்கான நேரம் பெரிய அள­வில் மிச்­ச­மா­கும். இருந்­தா­லும் அதற்­குப் பதி­லாக சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் ஜோகூரைச் சேர்ந்த ஊழி­யர்­கள் தின­மும் மலேசி­யா­வி­லி­ருந்து பய­ணம் மேற்­கொள்ள விரும்­பு­வ­தா­கக் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் அதி­க­மான வாழ்க்­கைச் செல­வி­னம், குடும்­பத்­தா­ரு­டன் வாழ விரும்­பு­வது போன்­றவை அதற்­குக் கார­ணங்­கள் என்று அவர்­கள் கூறி­னர்.

சென்ற மாதம் முதல் தேதி­யிலிருந்து முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் கட்­டுப்­பா­டு­க­ளின்றி சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே தரைவழிப் பய­ணம் மேற்­கொள்­ள­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டது. அதற்­குப் பிறகு முதல் இரண்டு வாரங்­க­ளி­லேயே சுமார் 663,000 பேர் காஸ்வே கடற்­பா­லம் வழி­யா­க­வும் துவாஸ் இரண்­டாம் இணைப்பு வாயி­லா­க­வும் இரு நாடு­க­ளுக்­கும் இடையே பய­ணம் மேற்­கொண்­ட­னர்.